ஹிந்தியில் பிரபல நடிகையான வாணி கபூர் மதத்தை கேவலப்படுத்தும் வகையில் உள்ளாடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ராஜ மௌலி இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் நாணி. அதன் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ‘ஆஹா கல்யாணம்’ என்ற நேரடி தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாவர் நடிகை வாணி கபூர். டெல்லியை பூர்வீகமாக கொண்ட இவர், ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘சுத் தேசி ரோமன்ஸ் ‘ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பினரே இவருக்கு ‘ஆஹா கல்யாணம்’ படத்தின் வாய்ப்பு கிடைத்து. அதன் பின்னர் இந்தியில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வந்தார் அம்மணி.

இதையும் பாருங்க : தலையை போல அசால்ட்டாக சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் சுற்றும் சிம்ரன். குவியும் பாராட்டு.

மாடல் அழகி என்பதால் அம்மணி அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம். மேலும், தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். ஆனால், சமீபத்தில் இவர் வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படம் ஒன்றில் ராம், ராம் என்று இந்தியில் எழுதப்பட்டிருந்த. இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதோடு, சர்ச்சையும் கிளம்பியது. ராமரின் பெயர் எழுதப்பட்ட மேலாடையை, எப்படி அணியலாம் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியது.

Advertisement

Advertisement

மேலும், மும்பையை சேர்ந்த ராமா சாவந்த் என்பவர், ஜோஷிமார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ராமரின் பெயர் எழுதப்பட்ட அரைகுறை ஆடை அணிந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை வாணி கபூர். இதன் மூலம் இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனால் வாணி கபூர் அந்த புகைப்படத்தை நீக்கியுள்ளார். ஆனால், இது குறித்து எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்காமல் இருக்கிறார் வாணி கபூர்.

Advertisement