அந்த படத்தை கலாய்த்ததால் அவரும் அவரது அப்பாவும் என்னை தேடினாங்க. லொள்ளு சபா இயக்குனர் பேட்டி. வீடியோ இதோ.

0
51198
lollusabha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது சூப்பர்ஸ்டார் முதல் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பாரபட்சம் பார்க்காமல் பாடங்களை தாறுமாறாக கிண்டல் செய்து இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்தார்கள் மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு நடிகர் நடிகர்கள் தற்போது சினிமாவிலும் கலக்கி வருகிறார்கள் சந்தானம் சுவாமிநாதன் பாஸ்கர் என்று பல்வேறு நடிகர்கள் லொள்ளு சபா நிகழ்ச்சியில் இருந்து வந்தவர்கள்தான்.

-விளம்பரம்-

வீடியோவில் 9:27 நிமிடத்தில் பார்க்கவும்

- Advertisement -

மேலும் லோல்லு சபா வீடியோக்கள் தற்போது யூடியூபில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லொள்ளு சபா இயக்குனர் ராம்பாலா, லொள்ளு சபாஸ்வாமிநாதன். ஜீவா என்று பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் விஜய்யின் போக்கிரி படத்தை பேக்கரி என்று கலாய்த்ததால் விஜயும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரும் தங்களை தேடியதாக லொள்ளு சபா இயக்குனர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் இருந்து வருபவர் நடிகர் விஜய் இவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.அதுபோக தற்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.

இந்தப் பேட்டியின் போது பேசிய லொள்ளுசபா இயக்குனர் ராம் கூறுகையில் நான் இளையதளபதி விஜய்யின் போக்கிரி படத்தை பேக்கரி என்று செய்திருந்தேன். பின்னர் அந்த ஷூட்டிங்கை எடுத்து முடித்து விட்டு நாங்கள் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்போது எனக்கு அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. அதில் ‘இங்கே எவ்வளவு பிரச்சனை இருக்கிறது நீங்கள் ஆபீஸ் வராமல் அங்கே என்னடா செய்து கொண்டிருக்கிறீர்கள்’ என்று சொன்னார்கள்.

-விளம்பரம்-

நான் உடனே என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு உங்கள் இருவரையுமே விஜய்யும் அவரது தந்தையும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். ஆனால், தற்போது அதை எல்லாம் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் என்று சிரித்தபடி கூறியுள்ளார் .இதை தொடர்ந்து பேசிய நடிகர் ஜீவா , உண்மையில் விஜய் அவர்கள் லொள்ளுசபாவின் மிகப்பெரிய ரசிகர், அதை பார்த்துவிட்டு தான் நான் எனக்கு குருவி படத்திற்கு வாய்ப்பும் கிடைத்தது என்று கூறியுள்ளார்.

Advertisement