ராயப்பனை கொன்ற இவர் யார் தெரியுமா ? எவ்வளவு மாஸா கால்பந்து ஆடுறாரு பாருங்க.

By Rajkumar · 30/10/2019

அட்லீ இயக்கத்தில் இளைய விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'பிகில்' திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷாராப், ஆனந்த் ராஜ், விவேக், யோகி பாபு, கதிர், டேனியல் பாலாஜி, இந்துஜா, ரேபா மோனிகா, ரோபோ சங்கர் மகள் என்று பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதிலும் இந்த படத்தில் கால்பந்து விளையாட்டு அணியில் இருந்த அனைத்து நடிகர்களுமே உண்மையான கால்பந்தாட்ட வீரர்களை போல நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நடிப்பதற்காக பலரும் கால்பந்தாட்ட விளையாட்டை பயிற்சியும் பெற்றனர். அவ்வளவு ஏன் இந்த படத்தில் நடித்த விஜய் கூட கால்பந்தாட்ட பயிற்சிகளைஎடுத்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள ஒருவரை பற்றி ஒரு வெளியாகியுளளது. அது என்னவெனில் இந்த படத்தில் நடித்துள்ள விஜயனின் கதை தான். பிகில் படத்தில் வில்லனாக நடித்த இவருக்கும் கால்பந்தாட்டத்திற்கும் நிறையவே சம்மந்தம் இருக்கிறது. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இவர் தான் நிஜ வாழ்வில் ஒரு உண்மையான பிகில்.

இதையும் பாருங்க : வசூல் சாதனையை படைத்து வரும் பிகில். 5 நாளில் இத்தனை கோடியா ?

இவர் வேறு யாரும் இல்லை, இவரும் ஒரு பிரபல கால்பந்தாட்ட வீரர் தான். இவருடைய பெயர் ஐ எம் விஜயன். கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாக கொண்ட இவர் வறுமையின் காரணமாக ஆரம்பத்தில் திருச்சூர் முனிசிபாலிட்டி மைதானத்தில் சோடா விற்று வந்தார். சிறுவயது முதலே கால்பந்தாட்டத்தில் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த விஜயன், பின்னர் கேரள டிஜிபி மூலமாக கேரளா காவல்துறையில் கால்பந்தாட்ட கிளப்பில் தனது 17 வயதில் இணைந்தார். கேரள காவல்துறை கால்பந்தாட்ட அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த விஜயன் பல்வேறு போட்டிகளில் தனது அபார ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். அதன்பின்னர் பல்வேறு போட்டிகளில் ஆடிய விஜயன் பல்வேறு கால்பந்தாட்ட கிளப்பில் ஆடி வந்தார். மேலும், 1999 ஆம் ஆண்டு சவுத் ஏசியன் பெடரேஷன் நடத்திய கால் பந்தாட்ட போட்டியில் 12 நொடிகளில் கோல் அடித்து சாதனை படைத்தார்.

அந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு விஜயன் ஒரு முக்கிய காரணமாக இருந்து வந்தார். அதன்பின்னர் 2003ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து விலகினார். இதுவரை 40 சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடிய விஜயன், 29 கோல்களை அடித்துள்ளார். கால்பந்தாட்ட விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார். மலையாளத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஷாந்தம் என்ற படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை துவங்கிய விஜய், விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் ஸ்ரியா ரெட்டியின் அண்ணனாக நடித்திருந்தார். மலையாளத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயன் தமிழில் திமிரு, கொம்பன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

https://twitter.com/IMVijayan1/status/1178162239578071040

விஜயனுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்து தனது குடும்பத்தாருடன் எடுத்த புகைப்படங்கள் கூட வெளியாகி இருந்தன. கால்பந்தாட்ட போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் விஜயன், சொந்தமாக விளையாட்டு உபகரணங்களை விற்கும் ஒரு கடையை நடத்தி வருகிறார். இதுமட்டுமல்லாமல் கடந்த 2018ஆம் ஆண்டுபிக் டாடி என்டர்டெய்ன்மென்ட் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்தார் விஜயன். அதுவும் தனது கால்பந்தாட்ட நண்பர்களுடன் இணைந்து இந்த நிறுவனத்தை அவர் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகர் விஜயன் கால்பந்து விளையாடும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் இந்த வயதிலும் மிகவும் அருமையாக கால்பந்து விளையாடி அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full