வசூல் சாதனையை படைத்து வரும் பிகில். 5 நாளில் இத்தனை கோடியா ?

0
5859
Bigil
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவரது படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வசூல் சாதனைகளை படைத்து விடுகின்றது. இறுதியாக இவரது நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும், 200 கோடி மேல் வசூல் சாதனை செய்திருந்தது. சர்க்கார் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-
Image result for bigil"

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய தீபாவளி கொண்டாட்டமாகவே அமைந்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், ஆனந்தராஜ், யோகிபாபு ,விவேக், கதிர் இந்துஜா, டேனியல் பாலாஜி என்று ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அதேபோல மெர்சல் படத்திற்கு பின்னர் இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார் விஜய். அதிலும் அப்பா கதாபாத்திரத்தில் வரும் ராயப்பன் தான் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : ஆஹா கல்யாணம் பவி டீச்சருக்கு அடித்த லக். முதல் படமே இவருடனா.

- Advertisement -

பொதுவாக விஜய் படங்கள் என்றாலே வெளியான ஒரு சில நாட்களிலேயே வசூல் சாதனையை செய்து விடும். அந்த வகையில் இந்த திரைப்படமும் வரிசையில் அடுத்து சென்றுகொண்டிருக்கிறது வெளியான அதிலும் இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே இருநூறு கோடி ரூபாய் வியாபாரம் செய்துவிட்டது மேலும் முதல் நாளில் 50 கோடி வசூல் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் வெளியான 5 நாட்களில் இந்தப்படம் 186 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் தமிழகத்தில் என்பது 80 கோடி வசூலும், வெளிநாடுகளில் 64 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், விரைவில் இந்த படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image result for bigil"

இதற்கு முன்பாக வெளியான சர்க்கார் திரைப்படமும் 200 கோடி வசூல் சாதனை செய்திருக்கிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பின் வசூல் நாயகன் விஜய் தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க இந்த படத்திற்கு கிடைத்து வரும் மோசமான விமர்சனங்களால் இந்த படத்திற்கு பதிலாக கார்த்திகேயன் கைதி திரைப்படத்தை திரையரங்க உரிமையாளர்கள் மாற்றி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையின்போது விஜயின் பிகில் திரைப்படம் தமிழகத்தில் 60 0கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும், கைதி திரைப்படம் குறைவான திரையரங்குகளில் தான் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், பிகில் திரைப்படத்தை விட கைதி திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அதனால் கைதி திரைப்படத்தின் காட்சிகளை திரையரங்க உரிமையாளர்கள் அதிகரித்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ஆரம்பத்தில் வசூலில் மந்தமாக இருந்த கைதி திரைப்படம் தற்போது பிகிலுக்கு நெருக்கமான ஒரு வசூலை செய்து வருகிறது என்ற ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது .மேலும் , ஒரு சில திரையரங்குகளில் படத்தை எடுத்துவிட்டு கைது படத்தைதிரையிட்டுள்ளார்களாம்.

Advertisement