அபிகா முதல் காஜல் வரை – அப்பா மற்றும் மகனுக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் யார் ?

0
468
ambika
- Advertisement -

பொதுவாகவே சினிமா உலகில் காலங்காலமாக தங்களுடைய வாரிசுகளை படத்தில் நடிக்க வைப்பது வழக்கமான ஒன்று. அது தமிழ் மொழி சினிமாவில் மட்டுமில்லாமல் எல்லா மொழி சினிமாவிலும் நடந்து வருகிறது. அந்த வகையில் ஒரு காலத்தில் நடிகைகள் எல்லாம் அப்பாவுக்கு ஜோடியாக நடித்து பின் அவருடைய மகன்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்கள் இந்த மாதிரி சம்பவம் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமாக உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க ஒருகாலத்தில் சினிமாவில் நடிகைகள் பல ஆண்டு காலமாக ஆட்சி புரிந்து வந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் 5-7 வருடம் சினிமாத் துறையில் நீண்டு இருப்பதே ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால், ஒரு காலகட்டத்தில் நடிகைகள் அப்பா, மகன்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார்கள். அந்த வகையில் அப்பாவுக்கும் மகனுக்கும் ஜோடியாக நடித்த நடிகைகளின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

அம்பிகா:

தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் அம்பிகா. இவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த வாழ்க்கை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்பு அவருடைய மகன் பிரபுவுக்கு ஜோடியாக வருங்கால தூண்கள் என்ற படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

ராதா:

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ராதா. இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த முதல் மரியாதை என்ற படத்தில் ராதா நடித்திருந்தார். பின்பு இளைய திலகம் பிரபு உடன் ஆனந்த் என்ற படத்தில் ராதா இணைந்து நடித்திருந்தார்.

லட்சுமி:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் லட்சுமி. இவர் சிவாஜி கணேசனுடன் இணைந்து லட்சுமி நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்பு 1988 ஆம் ஆண்டு வெளிவந்த என்னுயிர் கண்ணம்மா என்ற படத்தில் அவருடைய மகன் பிரபுவுடன் இணைந்து லட்சுமி நடித்து இருக்கிறார்.

காஜல் அகர்வால்:

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. சிரஞ்சீவி உடன் கைதி நம்பர் 150 என்ற படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். பின்பு அவருடைய மகன் ராம்சரணுடன் 2009ஆம் ஆண்டு வெளிவந்த மாவீரன் என்ற படத்தில் காஜல் அகர்வால் நடித்து இருந்தார்.

தமன்னா:

சிரஞ்சீவியுடன் சிரா நரசிம்மா ரெட்டி என்ற படத்தில் தமன்னா நடித்து இருந்தார். பின் அவருடைய மகன் ராம்சரணுடன் ரச்சா என்ற படத்திலும் நடித்திருந்தார். இப்படி அதிகம் தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் பிரபுவுடன் தான் நடிகைகள் வலம் வந்திருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement