2020ஆண்டு முடிந்து 2021 ஆம் ஆண்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். அதனால் இந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் நடந்த பல்வேறு விஷயங்களின் ரீ – வைண்டை நம் வளைத்ததில் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இந்த ஆண்டு திருமணத்தை முடித்த கோலிவுட் பிரபலங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பிரச்சனை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பொது மக்களை போல பிரபலங்களும் ஊரடங்கினால் வேலை இல்லாமல் முடங்கி இருந்தனர்.

விஷ்ணு விஷால் :

மேலும், கொரோனா பிரச்சனை காரணமாக பல்வேறு பிரபலங்களின் திருமணம் கூட சத்தமில்லாமல் முடிந்தது. அதில் இந்த வரிசையில் முதலில் பார்க்க இருப்பது விஷ்ணு விஷால் தான். ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால் கடந்த 2020 ஆம் ஆண்டு பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக அறிவித்தார். இதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்துக்கொண்டார்.

Advertisement

கயல் ஆனந்தி :

தமிழில் கயல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஆனந்தி தமிழ் தெலுங்கு என்று பல படங்களில் நடித்திருந்தார் இப்படி ஒரு நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஏழாம் தேதி இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை கயல் ஆனந்தி திருமணம் செய்து கொண்டார் இந்த திருமணம் காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. கயலின் கணவர் சாக்ரடீஸ் ‘மூடர்கூடம்’ படத்தின் இயக்குனர் நவீன் அவர்களின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லிஜிமோல் ஜோஸ் :

தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தாரத்தின் மனைவியாகவும் ஜி வி பிரகாஷின் அக்காவாகவும் நடித்தவர லிஜிமோல் ஜோஸ். மலையாள நடிகையான இவர் சமீபத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தில் செங்கேணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் அக்டோபர் 4 ஆம் தேதி அருண் ஆண்டனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

Advertisement

கவிஞர் சினேகன் :

திரைப்பட கவிஞரும் நடிகரும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் போட்டியாளரான சினேகன் பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஜூலை மாதம் உலகநாயகன் கமல் தலைமையில் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவர் தமிழில் ஒரு சில சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

கார்த்திக் குமார் :

சுச்சி லீக்ஸ் சர்ச்சை மூலம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய பின்னணிப் பாடகி சுச்சித்ராவின் கணவரும் நடிகருமான கார்த்திக் குமார் சுச்சித்ராவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமிர்தா சீனிவாசன் என்பவரை கார்த்திக் குமார் திருமணம் செய்திருக்கிறார். அமிர்தா சீனிவாசன் தமிழில் மேயாத மான், தேவ் போன்ற படங்களின் மூலம் பரவலாக அறியப்பட்டவர். இவருக்கு படங்களின் 28. கார்த்திக்கு வயது 44. தன்னை விட 16 வயது இளையவரை கார்த்திக் இரண்டாம் திருமணம் செய்து இருக்கிறார்.

வித்யு லேகா :

இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூ லேகா. தமிழ் தெலுங்கு என்று பல்வேறு மொழிகளில் நடித்த இவருக்கு கடந்த ஆண்டு சஞ்சய் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இப்படி ஒரு இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இவருக்கு திருமணம் நடைபெற்றது.

Advertisement