தாராவி குடிசை To ஹாலிவுட் சினிமா – சர்வதேச மாடலாக மாறிய 14 வயது சிறுமி.

0
2024
- Advertisement -

தாராவி குடிசை சிறுமி ஹாலிவுட் படம், சர்வதேச மாடலாக மாறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மும்பை தாராவி பகுதி பற்றி அனைவரும் அறிந்ததே. ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா படம் தாராவி மக்கள் நிலைமையை வெட்டவெளிச்சமாக காட்டி இருந்தது. மேலும், அந்த பகுதியில் அதிகமாக குடிசைகள் தான் இருக்கும். வறுமையின் பிடியில் அங்குள்ள மக்கள் சிக்கி தவித்து இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இருந்தாலும் அங்கு வளரும் பிள்ளைகள் பலர் படிப்பு, நடனம், பாட்டு என தனி திறமை கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த குடிசைப் பகுதியில் இருந்து சிறுமி ஒருவர் பிரபல காஸ்மெட்டிக் பொருளுக்கு விளம்பரம் மாடலாக மாறியிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தாராவி குடிசை பகுதியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் போட்டி ஒன்று வைத்திருந்தார்.

- Advertisement -

மலீஷா செய்த சாதனை:

அதன் மூலம் குடிசைகளின் இளவரிசியாக மலீஷா கார்வா என்ற சிறுமியை தேர்ந்தெடுத்து இருந்தார். தற்போது அந்த சிறுமிக்கு 14 வயது ஆகிறது. இந்த சிறுமி ஏழை குடும்பத்தில் சேர்ந்தவர். தற்போது இவர் பாரஸ்ட் எஸ்சன்சியல்ஸ் என்ற காஸ்மெடிக் பிராண்டின் `தி யுவதி கலெக்‌ஷன்’ விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த இளம் வயதிலேயே மலீஷா கண்ட கனவு நனவாகி இருக்கிறது. மேலும், இத்தொடர்பாக அந்த கம்பெனி அறிக்கை ஒன்றும் வெளியிட்டு இருக்கிறது.

நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

அதில் அவர்கள் தாரா பகுதியை சேர்ந்த பெண்கள் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். எங்கிருந்தாலும் கனவை நிறைவேற்ற முடியும் என்பதை வெளிக்கொண்டுவரும் நோக்கில் தான் மலீஷாவின் படம் பாரஸ்ட் எஸ்சன்சியல்ஸ் விளம்பரத்தில் இடம் பெற்று இருக்கிறது என்று கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் மலீஷா ஒரு கடைக்குள் நுழைகிறார். அந்த கடையில் மனிஷாவின் புகைப்படத்துடன் கூடிய விளம்பரம் ஒன்று இருக்கிறது.

-விளம்பரம்-

மலீஷா நடிக்கும் படம்:

அதை பார்த்தவுடன் மலீஷா மட்டற்ற மகிழ்ச்சியில் மூழ்கி இருக்கிறார். மேலும், இந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். இதை பார்த்த பலரும் மலீஷாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் ஒரு முறை மலீஷா டிவி நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ராவின் பேஷன் ஷோ நிகழ்ச்சியை பார்த்து தான் மாடலாக வர விரும்பியதாக கூறி இருக்கிறார். தற்போது மலீஷா இரண்டு ஹாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார்.

Advertisement