தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் வெற்றிமாறன் திகழ்ந்து வருகிறார் . இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதிலும் இவர் தனுஷை வைத்து இயக்கிய படம் எல்லாம் வேற லெவல். தனுஷுக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இவர் தான் என்று சொல்லலாம். இவர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். அதற்கு பின் 2007 ஆம் ஆண்டு தனுசை வைத்து பொல்லாதவன் என்ற படத்தை இயக்கி சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார்.

இந்த படத்திலேயே வெற்றி மாறனுக்கு தேசிய விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து இவர் ஆடுகளம், உதயம், காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். இறுதியாக தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றது. இது ஒரு பக்கமிருக்க இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் பொல்லாதவன் படத்துக்குப்பிறகு இருந்தே உணவு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

Advertisement

டயட் பாலோ பண்ணும் வெற்றிமாறன்:

அதிலும் கீட்டோ டயட் என்பதை அவர் ஃபாலோ செய்கிறார். கொழுப்பு அதிகமாகவும் கார்போஹைட்ரேட் கம்மியாகும் இருக்கும் உணவுப் பொருட்களை எடுத்து கொள்வாராம். அதேபோல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழங்களையும், வெள்ளை சர்க்கரையும் சாப்பிட மாட்டாராம். இப்படி ஒரு நிலையில் வெற்றிமாறன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய உணவு பழக்கத்தை குறித்தும் ஆரோக்கியத்தைக் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

சிகரெட் பழக்கத்தை விட்ட வெற்றிமாறன்:

அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு 13 வயதிலிருந்து சிகெரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 1998 ஆம் ஆண்டு இருந்து பொல்லாதவன் படத்திற்கு பிறகு 2008 முதல் 2009 ஆம் ஆண்டு வரை சிகரெட் பிடிக்கும் பழக்கம் அதிகம் இருந்தது. ஆனால், கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தை பார்த்துவிட்டு சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன். மேலும், மைக்ரோவேவ் ஓவனில் சமைத்த உணவை சாப்பிடுவது உணவில் விஷம் கலப்பதற்கு சமம். அதனால் எங்களிடம் முன்பு மைக்ரோவேவ் இருந்தது.

Advertisement

பழங்களை சாப்பிடக்கூடாது:

இப்போது என் குழந்தைகள் அதை தங்கள் விளையாட்டுப் பொருட்களாக வைத்திருக்கிறார்கள். அதேபோல் பச்சை ஆப்பிளைத் தவிர வேறு பழங்களை சாப்பிட வேண்டாம் என்று டயட் ட்ரைனர் பாசு அறிவுறுத்தினார். பழங்களை தினமும் சாப்பிடுவது என்னைப்பொறுத்தவரை நல்லது கிடையாது. ஏன்னா, நாம் உண்ணும் பழங்கள் விஷம். பழங்கள் அழகாகவும் சுவையாகவும் இருப்பதற்கு ரசாயன ஊசி போடுகிறார்கள். அதனால் தான் நான் சாப்பிட வேண்டாம் என்று சொல்கிறேன். காஷ்மீர் ஆப்பிள் என்று சொல்லும் ஆப்பிள்கள் அனைத்தும் ஆஸ்திரிலேயாவில் இருந்து வருகின்றன. அங்கு இருந்து இங்கு ஒரு ஆப்பிளை ஏற்றுமதி செய்ய மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகும்.

Advertisement

வெள்ளை சர்க்கரையை தடை செய்யணும்:

புதிதாக எப்படி தெரிகிறது என்றால் ஆப்பிள்களில் ரசாயன ஊசி போட்டும், அதை மெழுகு பூசியும் பாலிஷ் செய்து அழகாக காட்டுகிறார்கள். மேலும், நம்முடைய நாட்டு ஆப்பிள் சாப்பிட விரும்பாத அளவுக்கு சிறியதாக இருக்கும். அதை சாப்பிட்டால் தான் ஆரோக்கியம். நாம் ஊட்டியிலிருந்து உண்மையான புதிய ஆப்பிள்களை பெறலாம். அவை ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும். அத்தகைய ஆப்பிள்களை வாங்கினால் அது சீக்கிரம் அழுகி விடும். சீக்கிரம் அழுகும் உணவு தான் சிறந்த உணவு. அதேபோல் வெள்ளைச் சர்க்கரையை உட்கொள்வது மனிதனுக்கு மிகவும் ஆபத்தானது. அது கொக்கைன் சாப்பிடுவதற்கு சமம். அதனால் வெள்ளை சர்க்கரையை தடை செய்ய வேண்டும் என்று வெற்றிமாறன் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Advertisement