ருத்ர தாண்டவம் படத்திற்கு மோசமான விமர்சனம் கொடுத்த பிரபல பத்திரிகைக்கு மோகன் பதிலடி கொடுத்துள்ளார். திரௌபதி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்து உள்ளார். இரண்டாவது முறையாக இந்த படத்தில் மோகன், ரிச்சர்ட் இந்த படத்தில் இணைந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக சின்னத்திரை சீரியல் நடிகை தர்ஷா குப்தா நடித்து உள்ளார்.

போதை பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் ருத்ரதாண்டவம் படம். இன்றைய சமுதாயத்தில் நிலவும் சாதி பிரச்சனைகளையும், போதைக்கு அடிமையாகும் இளைனர்கள் நிலைமை குறித்தும் பேசப்பட்டு இருப்பதாக மோகன் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிரபல பத்திரிகை நிறுவனமான விகடன் இந்த படத்திற்கு 29 மதிப்பேன் அளித்துள்ளது.

Advertisement

மேலும், இந்தத் திரைப்படம் வருங்கால தலைமுறைக்கு மிகவும் ஆபத்தானது என்று அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த விமர்சனத்தை ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் பகிர்ந்திருந்தார் இதற்கு பதிலளித்த மோகன், சினிமாவில் யார் ஜொலிக்க வேண்டும் ஜொலிக்க கூடாது என்பதை இவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். இதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதுபோன்ற அபத்தமான மீடியாக்களின் விமர்சனம் தனக்கு பழகி விட்டது என்று பதிவிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே, மோகன் இயக்கிய ‘திரௌபதி’ படம் வெளியான போது அதற்கு 29 மதிப்பெண் கொடுத்து இருந்த விகடன் பத்திரிகை ‘தன் தரப்பு நியாயத்தை சினிமாவழி பேசுவதில் தவறில்லை. அதற்காக எதிர்த்தரப்பை மிகவும் தரம் தாழ்த்திச் சித்திரித்து, முழு எதிரிகளாக முன்னிறுத்துவது அறமில்லையே, ‘திரௌபதி’ அறம் பேசவில்லை’ என்று பதிவிட்டு இருந்தது.

Advertisement

இதற்கு பதில் அளித்து இருந்த மோகன், இது என் படத்திற்கான மார்க் இல்லை.. என் சமூகத்தில் இருந்து நான் வெற்றியாளராக வெளிவந்ததை தாங்க முடியாத வலி.. இது ஆரம்பம் தான்.. பல வன்னிய படைப்பாளிகள் இனி வெல்ல தான் போகிறார்கள்.. இப்படியே குப்புற படுத்து புலம்ப வேண்டியது தான் நீங்க.. உங்கள் விமர்சனத்திற்கு நன்றி என்று பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement
Advertisement