Ar போட்ட tuneஐ காபி அடித்த ஹரிஷ், யுவன், ஜிவி - வைரலான வீடியோவை கண்டு கடுப்பாகி Gv செய்த செயல்.

By Rajkumar · 1/6/2022

ட்ரெண்டிங் வீடியோவை பார்த்து ஜிவி பிரகாஷ் ட்விட்டரை பிளாக் செய்து இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் பணிபுரிந்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இசைத்துறையில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார். இவர் சினிமா துறையில் முதன் முதலாக வெயில் படத்தில் இசை அமைத்து அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் மூலம் மக்களிடையே அதிக இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்து இருந்தது.

https://twitter.com/worldofkarthic/status/1531570850549288961

இந்த படத்தை தொடர்ந்து இவர் நிறைய படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும், இவர் ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஒரு பாடகனாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் படங்களில் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கி இருந்தார். அதுவும் , இவருடைய பென்சில், டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இதையும் பாருங்க : பல ஆண்டுகள் காதலித்து வரும் காதலரை இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க காரணம் இதான் - மனம் திறந்த பிரியா பவானி

ஜி.வி. பிரகாஷ் நடித்த படம்:

கடந்த ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சிலர் படமும், ஜெயில் படமும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. சமீபத்தில் ஜிவி பிரகாஷின் நடிப்பில் வெளிவந்த இந்த படம் செல்பி. இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநர்களில் ஒருவரான மதிமாறன் இயக்கத்தில் இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படம் ஆக்சன், திரில்லர் பாணியில் உருவாகி இருந்தது. இந்தப் படத்தில் இயக்குநர் கவுதம் வாசு தேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

https://twitter.com/i_sreenivas/status/1531548792553885699

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படம்:

மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் படம் 13. இது ஹாரர் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று இருந்தது. இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் அவர்கள் ஹாலிவுட்டில் நடிக்க போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ஹாலிவுட் படம்:

“ட்ராப் சிட்டி”(trap city) என்ற படத்தில் தான் ஜி வி பிரகாஷ் நடிக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்து இருந்தார்கள். ஜி.வி. பிரகாஷ் படம் என்றாலே காமெடியும், கெமிஸ்ட்ரிக்கும் அளவே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த வகையில் இந்த ட்ராப் சிட்டி படமும் மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தை பிளாக் செய்திருக்கிறார். அது என்னவென்றால், பயனர் ஒருவர் இசையமைப்பாளர்களின் பாடல்களை ஒருங்கிணைத்து வீடியோவாக ஒன்று போட்டிருக்கிறார்.

https://twitter.com/unreserved_1980/status/1531576273171927040

ஜி.வி. பிரகாஷ் டீவ்ட்டர் பிளாக் செய்ய காரணம்:

அதில் அவர், வடிவேலுவின் காமெடியை எடுத்து ஏ ஆர் ரகுமான் பாடிய காதல் தினம் படத்தின் இசையையும், ஹாரிஸ் ஜெயராஜ் பாடிய மஜ்னு படத்தின் பாடலையும், யுவன் சங்கர் ராஜா பாடிய ராம் படத்தின் பாடலையும், ஜிவி பிரகாஷ் பாடிய ஆடுகளம் படத்தின் பாடலையும் ஒன்றாக இணைத்து ஒரு மீம்ஸ் கிரியேட் பண்ணி வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அதாவது ரஹ்மான் போட்ட டுயூனை தான் மற்ற அனைவரும் காபி அடித்தது போல அந்த வீடியோ அமைந்து இருக்கிறது. இது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இது குறித்து பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இதைப் பார்த்த ஜிவி பிரகாஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தை பிளாக் செய்து இருக்கிறார். இது குறித்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full