பல ஆண்டுகள் காதலித்து வரும் காதலரை இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க காரணம் இதான் – மனம் திறந்த பிரியா பவானி

0
870
priyabhavani
- Advertisement -

திருமணம் குறித்து சமீபத்தில் பிரியா பவானி சங்கர் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். அதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. இதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.

-விளம்பரம்-
ஜிம் ஒர்க் அவுட் விடியோவை வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர்.! மூச்சிரைத்த  ரசிகர்கள்.! - Tamil Behind Talkies

நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் என்ற படத்தின் மூலம் தான் ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து மிக பிரபலமானார் ப்ரியா பவானி சங்கர். அதனை தொடர்ந்து இவர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி, வெங்கடேசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளிவந்த “மான்ஸ்டர்” திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம்.

இதையும் பாருங்க : துபாய் தொழிலதிபருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த (குட்டி அசின்) பூர்ணா – தன் வருங்கால கணவருடன் அவரே வெளியிட்ட புகைப்படம்.

- Advertisement -

பிரியா பவானி நடித்த படங்கள்:

பின் சமீபத்தில் ஹரிஷ் கல்யான், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘ஓ மணப்பெண்ணே’. இந்த திரைப்படம் ஹாட் ஸ்டார் Ott தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அபிஷேக் குமார், அன்புதாசன், அனிஷ் குருவில்லா, குக்கு வித் கோமாளி அஸ்வின், கே எஸ் ஜி வெங்கடேஷ் போன்ற பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

பிரியா பவானி நடிக்கும் படங்கள்:

இதனை தொடர்ந்து இவர் தற்போது குருதி ஆட்டம், பொம்மை, ஹாஸ்டல், ருத்ரன், பத்து தல, திருச்சிற்றம்பலம், அகிலன் மற்றும் இந்தியன் 2, யானை போன்ற பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே பிரியா பவானி சங்கர், ராஜவேல் என்பவரை நீண்ட வருடமாக காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர்களுடைய புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. ஆனால், திருமணம் குறித்து எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பிரியா பவானி சங்கர் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

-விளம்பரம்-

பிரியா பவானி அளித்த பேட்டி:

அதில் அவர் பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அதில் அவர், ரிப்போர்ட்டிங் பீல்டில் பண்ணலாம்னு என்று சில நேரம் தோன்றும். இன்னும் நல்லா பண்ண இருப்போம் என்று நினைப்பேன். மீடியாவை ரொம்ப மிஸ் பண்றேன். ஆயிரம் தான் இருந்தாலும் இது நடிப்பு தான். ஒருத்தரோட ஐடியாவை சீனா எழுதி தருகிறது. அதுக்கு நாம நடிக்கிறோம். ஆனால், ரிப்போர்ட்டிங் அப்படி இல்லை. நல்ல பண்ணலை என்றால் சீனியர் எடிட்டர் கிட்ட திட்டு வாங்கி இருப்போம்.

Priya Bhavani Shankar's Advice On Love To Her Fan Will Crack You Up; READ ON! | JFW Just for women

திருமணம் குறித்து பிரியா சொன்னது:

அதனால் நியூஸ் சேனல் தான் நான் கற்றுக் கொள்வதற்கு நிறைய உதவி இருக்கிறது. எல்லோரையும் போலவே ரஜினிகாந்த், விஜய், அஜித்துடன் நடிக்க ஆசைப்படுகிறேன். மீடியாவிற்கு வராமலிருந்தால் எனக்கு காலேஜ் படிக்கும்போது கல்யாணம் பண்ணிக்கனும்னு என் பாய் பிரண்டு கிட்ட சொன்னேன். அதனால் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகி இருப்பேன். என் பொருளாதார தேவைக்காக ஒரு வேலை பார்த்திருப்பேன். இந்த வேலை தான் செய்யணும் என்கிற லட்சியம் எல்லாம் எனக்கு இல்லை என்று கூறியிருந்தார்.

Advertisement