நடிகர் பாலாவின் படத்திற்கு வந்த தடைகளைப் பற்றி எமோஷனலாக காந்தி கண்ணாடி பட இயக்குனர் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதற்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் செய்தார். அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் KPY பாலா செய்த காமெடிகளுக்கு அளவே கிடையாது.

இதன் மூலம் தான் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல், சமூக சேவை செய்பவரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
சமூக சேவை செய்யும் பாலா:
பின் இவர் மலைவாழ் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தந்து இருந்தார். அதே போல கடந்த ஆண்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து இருந்தார். இதனால் பாலாவை குட்டி ராகவா லாரன்ஸ் என்று சொல்கிறார்கள். தற்போது லாரன்ஸ் நடத்தி வரும் மாற்றம் அறக்கட்டளையில் பாலா இணைந்து சேவை செய்து கொண்டு வருகிறார். தற்போது ஷெரிப் இயக்கத்தில் பாலா நடித்திருக்கும் படம் காந்தி கண்ணாடி.

காந்தி கண்ணாடி படம்:
இந்த படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்து இருக்கிறார்கள். நேற்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் படத்தின் வெளியீட்டுக்கு முன் பல தடைகள் வந்ததாக படத்தின் இயக்குனர் ஷெரிப் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் அவர், படத்திற்கு ஷோ இல்லை என்று சொல்லி போன் வருகிறது. ஏன்? எதற்கு? என்று தெரியவில்லை. சில தியேட்டரில் பேனர்கள் கூட வைக்கவில்லை. வைத்த பேனரையும் கிழித்து இருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=u2yuSU_ruJA
படத்தின் தடைகள்:
போஸ்டர் கூட ஒட்டவும் விடவில்லை. இது எதுவுமே எனக்கு புரியவில்லை.நான் 50 பைசா, ஒரு ரூபாய்க்கு போஸ்டர் ஓட்டுன பையன் சார். பாலா காரைக்காலில் இருந்து சினிமா கனவோடு ஓடி வந்த பையன் சார். ஏன் அடிக்கிறாங்க? எதுக்கு அடிக்கிறாங்க? என்றே தெரியவில்லை. சத்தியமா எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. அதுக்கு செலவு பண்ற காசை வேற எதுக்காவது நல்ல விஷயத்துக்கு செலவு பண்ணுங்க. எங்கள் அடிக்கணும்னு தோணுச்சுன்னா நேரில வந்து செலவு கூட அடிச்சிட்டு போங்க. படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருக்காங்க. அதுக்கு ரொம்ப நன்றி என்று பேசி இருக்கிறார்.






