தென்னிந்திய சினிமா திரை உலகில் 1970 களில் தொடங்கி 2000 ஆண்டுகளின் தொடக்கம் வரை நடித்த மிக பிரபலமான நடிகை ஸ்ரீவித்யா. இவர் பிரபலமான கர்நாடக இசை பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஆவார். தன்னுடைய 13வது வயதில் நடிக்க வந்தவர் ஸ்ரீவித்யா. எவர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த திருவருட்செல்வர் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். சிவாஜி, ரஜினி, கமல், ஜெய்சங்கர், விஜயகுமார் உட்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். அதோடு ரஜினியின் முதல் ஹீரோயினி ஸ்ரீவித்யா என்பது குறிப்பிடத்தக்கது. அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்தார்.

தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீவித்யா. ஸ்ரீவித்யா அவர்கள் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் 2003 ஆம் ஆண்டு மார்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அநியாயமாக இறந்தார். மேலும், ஸ்ரீவித்யா மரணப்படுக்கையில் இருக்கும் போதே தனது சொத்துக்களை எல்லாம் ஏழை குழந்தைகளுக்கு எழுதிவைத்தார். ஆனால், நடிகை ஸ்ரீவித்யா எழுதி வைத்து எல்லா சொத்துக்களும் ஏழை குழந்தைகளுக்கு போய் சேரவில்லையாம்.

Advertisement

ஸ்ரீவித்யா தனிப்பட்ட வாழ்கை:

ஸ்ரீவித்யா அவர்கள் சினிமா துறையில் கொடிகட்டிப் பறந்தாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான சோகங்களை தாங்கி இருந்தார். அதோடு நடிகை ஸ்ரீவித்யாவின் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகளும், குழப்பங்களும் ஏற்பட்டது. அப்போது தான் ஸ்ரீவித்யா அவர்கள் வாழ்க்கையில் சறுக்கி விழ தொடங்கினார். பின்னர் இவர் விவாகரத்து பெற்று பிரிந்து பல காலமாக தனியாக வாழ்ந்து வந்தார். பெற்றோர்கள் ,சொந்த உறவினர்கள் இல்லாமல் தனிமையில் அனாதை போல் வாழ்ந்து வந்தார் ஸ்ரீவித்யா.

ஸ்ரீவித்யா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவலம்:

இப்படி இவர் பல கொடுமைகளை அனுபவித்து வந்தாலும் காலம் அவருக்கு கொடுத்த பரிசு புற்றுநோய். இதனைத்தொடர்ந்து ஸ்ரீவித்யா அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல துன்பங்களையும், கஷ்டங்களையும் அனுபவித்து இறந்தார். இந்நிலையில் ஸ்ரீவித்யா தன் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் புற்றுநோய்க்கு மருந்து வாங்க கூட முடியாமல் இறந்து இருக்கிறார். இதை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் எழுதி இருக்கிறார். தற்போது இந்த அதிர்ச்சி தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement

உண்மையை உடைத்த புத்தகம்:

2003 ஆம் ஆண்டு ஸ்ரீவித்யாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. பின் ஆபத்தான நிலையில் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனளிக்காமல் 2006 ஆம் ஆண்டு தன்னுடைய 53 வயதில் இறந்தார். ஸ்ரீவித்யா தன் கடைசி கட்டத்தில் உடலில் கடும் வலியுடன் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதை ஸ்ரீவித்யாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் ‘ஒரு பெண் தன் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் அவருக்கு வலி நிவாரண மருந்துகள் வாங்க கூட வழியில்லாமல் தவித்தார்’ என்று மறைமுகமாக ஸ்ரீவித்யாவை குறித்து கூறியிருக்கிறார்.

Advertisement

ஸ்ரீவித்யா இறப்பிற்கு காரணம்:

இந்த நிலையில் கணேஷ்குமார் சகோதரி உஷா மோகன்தாஸ் தான் கிருஷ்ணர் நாயரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை படைத்ததாகவும், கேரள முன்னாள் அமைச்சரும் நடிகருமான கே.பி. கணேஷ்குமார் தான் ஸ்ரீவித்யாவுக்கு மருந்துகள் வாங்குவதை தடுத்ததாகவும் குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். நடிகை ஸ்ரீவித்யா சென்னையிலிருந்து திருவனந்தபுரத்தில் சென்று குடியேறிய பிறகு மலையாள சீரியல்களில் நடித்தார். அப்போது தான் கே.பி. கணேஷ்குமார் உடைய அறிமுகம் கிடைத்தது. நடிகை ஸ்ரீவித்யாவுக்கு இசைப் பள்ளி தொடங்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. இதற்காக கே.பி. கணேஷ் குமார் தலைமையில் ஒரு அறக்கட்டளையை ஸ்ரீவித்யா அமைத்தார்.

கணேஷ் குமார்

ஸ்ரீவித்யா கடைசி நிமிடங்கள்:

புற்றுநோய் கொடுமை உச்சகட்டத்தில் இருந்தபோது இந்த அறக்கடையில் இருந்து பணம் பெற்று தனக்கு மருந்து வாங்கித் தருமாறு ஸ்ரீவித்யா கேட்டுள்ளார். அதற்கு கே.பி. கணேஷ்குமார் மறுத்ததாக சொல்லப்பட்டது. தற்போது இந்த தகவலை கிருஷ்ண நாயரின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் உறுதி செய்துள்ளது. சொந்த வாழ்க்கையில் ஏமாற்றம், சொத்துக்களை இழந்து, தனிமை, விரக்தி என்று எல்லாவற்றையும் தாண்டி வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தான் தமிழகத்தின் ஒரு சிறந்த நடிகை மரணித்தார் என்ற சோகம் எத்தனை வேதனையானது.

Advertisement