அடேங்கப்பா, ஜெர்மன் நாட்டு காரை வாங்கிய மாஸ்டர் பட நடிகை – விலை எவ்வளவு தெரியுமா?

0
632
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக திகழ்பவர் கௌரி கிஷன். பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷன் மகள் தான் கௌரி கிஷன். இவர் மலையாளத்தில் வெளிவந்த மார்க்கம்களி என்ற படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். பின் தமிழில் வெளிவந்த 96 படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் பிரபல காமெடி நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும் நடித்திருந்தனர். நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் கௌரி கிஷன் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் ராம்- ஜானு ஜோடி தான் இணையத்தில் ஹாட் டாபிக்காக இருந்து வந்தது. அதில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷனின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டது. குறிப்பாக திரிஷாவின் பள்ளி கதாபாத்திரத்தில் வந்த கௌரி கிருஷ்ணன் பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்தார். அதிலும் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து தெலுங்கில் 96 படத்தின் ரீமேக்கில் அதே வேடத்தில் கௌரி கிஷன் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து கௌரி கிஷன் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

கௌரி கிஷன் நடித்த படங்கள்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து இருந்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தில் கௌரி கிஷன் கல்லூரி மாணவியாக நடித்திருப்பார். இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிகமாக கவனிக்கப்பட்டது. பின் இவர் தனுஷின் கர்ணன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

கௌரி கிஷன் நடிக்கும் படங்கள்:

இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி நடத்தும் போட்டோ ஷூட் புகைப்படங்கள், வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். அதுமட்டுமில்லாமல் சமூகம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கும் கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு சிறுமிகள் தங்களுக்கு பள்ளிப்பருவத்தில் நேர்ந்த துயரமான அனுபவங்களை பகிர்ந்து இருக்கும்போது கௌரி கிஷணனும் தனது பள்ளிப்பருவத்தில் நடந்த சம்பவத்தையும்,

-விளம்பரம்-

கௌரி கிஷன் வாங்கிய கார்:

பாலியல் தொல்லைகளுக்கு தயங்காமல் சொல்லுங்கள் என்று குரல் கொடுத்திருந்தார். இது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருந்தது. இந்த நிலையில் கௌரி கிஷன் அதிக விலையில் கார் ஒன்று வாங்கி இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், கௌரி கிஷன் அவர்கள் ஜெர்மனியின் தயாரிப்பான Volkswagen Taigun என்ற காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை 13.50 லட்சம் முதல் 22 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், Taigun ஒரு SUV கார் ஆகும். இந்த கார் 1310 கர்ப் எடை கொண்டது.

கௌரி கிஷன் வாங்கிய கார் பற்றிய தகவல்:

அதோடு 188 கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 385 லிட்டர் பூட் ஸ்பேஸ் ஆகியவற்றை கொண்டது. இந்த கார் 5 வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டருக்கு இந்த கார் 18.47 கி.மீ மைலேஜ் தருமாம். இந்த காரை தான் தற்போது நடிகை கௌரி கிஷன் வாங்கி இருக்கிறார். இந்த காரை வாங்கும் போது எடுத்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் கௌரி கிசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவருடைய வீடியோவை லைக் செய்தும் கமெண்ட்களை குவித்தும் வருகிறார்கள்.

Advertisement