கார் விபத்தில் சிக்கினார் இயக்குனர் கௌதம் மேனன் ! நடந்தது என்ன -விவரம் உள்ளே

0
1723

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து 21ஆம் நூற்றாண்டிற்கான காதல் மற்றும் மாஸ் படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். தற்போது சியான் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தினை இயக்கி வருகிறார்.
இவருக்கு தற்போது பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை சென்னை செம்மஞ்சேரி ரோட்டில் தனது காரில் சென்ற போது எதிரே வந்த டிப்பர் லாரியுடன் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தினால் கார் நசுங்கியது. ஆனால், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சில பெரிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

தற்போது அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செத்துள்ளனர். பிரபலமைனா இயக்குனருக்கு இப்பொடி ஒரு விபத்து ஏற்ப்பட்டுள்ளது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.