லவ் டுடே படத்தில் தன்னை Troll செய்தது குறித்து முதன் முறையாக மனம் திறந்த கௌதம் மேனன்.

0
868
gvm
- Advertisement -

இயக்குனர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியான திரைப்படம் “லவ் டுடே” இத்திரைப்படத்தில் பிரபல இயக்குனரான லவ் டுடே படத்தில் தனக்கு எதிரான ட்ரோல் எப்படி வந்தது என்பதை பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கவுதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய கருத்தை கூறியுள்ளார். பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கெளதம் வாசுதேவ் மேனன். 2001-ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம் ‘மின்னலே’. இது தான் தமிழ் மேனன் இயக்கிய முதல் திரைப்படமாம். இதில் ஹீரோவாக மாதவன் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் ‘காக்க காக்க, வாரணம் ஆயிரம்’, ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’, சரத்குமாரின் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, சிம்புவின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா’, வீராவின் ‘நடுநிசி நாய்கள்’, ஜீவாவின் ‘நீதானே என் பொன் வசந்தம்’, அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ போன்ற படங்களை இயக்கினார் கெளதம் மேனன்.

- Advertisement -

இந்த நிலையில் இவரை கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த லவ் டுடே திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்றது. அந்த படத்தில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த காட்சிகளில் ஒன்றில் உத்தமன் பிரதீப் தன்னுடைய காதலி நிகிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நுழைந்த அதில் வந்திருக்கும் மேசேஜ் களை பார்த்துக்கொண்டிருக்கிப்பார்.

இந்நிலையில் நிகிதாவை பின் தொடரும் பல இளைஞர்கள் மத்தியில் கௌதம் வாசுதேவ் மேனனின் கதாபாத்திரத்தில் பகடி என்ற பெயரில் தோன்றி நிகிதாவைக் கவர கவிதைகளையும், சில வரிகளையும் கூறியுருப்பர். அந்த கதாபாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனனாக “பிளிப் ப்ளிப்” யூடியூப் சேனலுக்காக ஒரு வீடியோ மூலம் பின்பற்றி அவரை ட்ரோல் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்ற யூடியூபரான குருபாய் இந்த பாத்திரத்தில் நடித்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தமிழ் இயக்குனர்கள் RoundTable பேட்டியில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே படத்தின் வெற்றியைப் பாராட்டிய கவுதம் மேனன், ஒரு கட்டத்தில் அந்தக் காட்சியைப் பற்றிக் குறிப்பிட்டு என்னிடம் கேட்டிருந்தால் நானே அந்த கதாபாத்திரத்தை நடித்து கொடுத்திருப்பேன் என்று கூறினார். மேலும் அந்த படத்தை மற்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்த படங்கள் வெளியாகும் போது தைரியமாக “லவ் டுடே” படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு பாராட்டுகளை கூறினார்.

மேலும் லவ் டுடே படத்தில் “உண்மையில் என்ன ஓட்டிருப்பாங்க” என்று கூறிய கவுதம் மேனன், பட குழுவினர் என்னை அழைத்திருந்தால் நானே அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன் என்று பெருமையாக கூறியிருந்தார். இப்படி அவர் கூறியது அர்ச்சனாவிற்கும் மற்ற பிரபலங்களுக்கும் இடையே சிறிய மனவருத்தை ஏற்ப்படுத்தியது.

Advertisement