தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட். இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார். அதற்கு பின் இயக்குனர் ராஜீவ் மேனனிடம் தான் உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு தான் மின்னலே இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

அதன் பின்னர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா என்று பல்வேறு ஹிட் படங்களை இயக்கினார் கௌதம் மேனன். மேலும், கவுதம் மேனன் இயக்குனர் ஆவதற்கு முன்பாக ‘மின்சார கனவு’ படத்தில் ஒரு சிறு காட்சியில் தோன்றி இருப்பார். அதே போலத்தான் கௌதம் மேனனின் தந்தையும் சினிமாவில் நடிக்கும் ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் கௌதம் மேனன்.

Advertisement

அதுவும் உலக நாயகன் கமல் படத்தில் தான். கௌதம் மேனனின் தந்தை கமலின் தீவிர ரசிகர். அவரது ஆசையை நிறைவேற்ற வேட்டையாடு விளையாடு படத்தில் சில காட்சிகளை வீட்டிலேயே எடுத்து தனது தந்தையை பார்க்க செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான கற்க கற்க பாடலில் வரும் இறுதிக்காட்சியில் கவுதம் மேனன் தந்தையை நடிக்க வைத்திருக்கிறார்.

அதே போல இதே படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே பாடலில் கெளதம் மேனனும் ஒரு பிரேமில் வந்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்டையாடு விளையாடு திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது 2007 ஆம் ஆண்டு கௌதம் மேனனின் தந்தை காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கௌதம் மேனன் தனது தந்தையின் வாழ்க்கையை மையமாக வைத்துதான்வாரணம் ஆயிரம் திரைப்படத்தை எடுத்தார்.

Advertisement

அந்த படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் வரும் சூர்யாவின் இன்ஸ்பிரேஷன் கௌதம்மேனன் தந்தைதான் என்பது குறிப்பிடத்தக்கது. கௌதம் மேனன் சமீப காலமாக இயக்கத்தை விட நடிப்பதுதான் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவர் விஜய்யின் பீஸ்ட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கெளதம் மேனன் இறுதியாக சென்றுவை வைத்து தனது படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

Advertisement

அதேபோல இவர் விக்ரமை வைத்து இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படம் நீண்ட வருடங்களாக கிடப்பில் கிடக்கிறது இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பின்னணி இசைகளை காண பணியை தயார் ஜெயராஜ் தொடங்கிவிட்டார் என்று கௌதம் மேனனின் பிறந்த நாளான இன்றுஹேரிஸ் ஜெயராஜ் தன்னுடைய பிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் பேக்ரவுண்ட் ஸ்கோர் பணிகள் துவங்கிவிட்டன. டால்பி 9.1.4 இல் விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்ளுக்கு மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.

Advertisement