என்ன பார்த்தும் பாக்காத மாதிரி போய்ட்டாரு தனுஷ் – ENPT படத்தின் தோல்விக்கு காரணம் சொன்ன GVM. இவ்ளோ பிரச்சனை நடந்திருக்கா ?

0
594
gvm
- Advertisement -

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் தோல்விக்கு காரணம் இது தான் என்று கௌதம் மேனன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை இருக்கிறது. ஏன்னா, அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட்.

-விளம்பரம்-

இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார். அதற்கு பின் இயக்குனர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு தான் மின்னலே படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதன் பின்னர் இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா என்று பல்வேறு ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். அதிலும் போலீஸ் ஸ்டோரி என்றால் நிச்சயம் ஹிட் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், சமீபகாலமாக இவர் இயக்கிய எந்த படங்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

- Advertisement -

வெந்து தணிந்தது காடு படம்:

இறுதியாக இவர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ‘ருத்ர தாண்டவம் ‘ படத்தில் நடித்து இருந்தார். தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தான் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறர்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறது.

கௌதம் மேனன் இயக்கும் படங்கள்:

காதல், கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. திரைப் பிரபலங்கள் பலரும் சிம்புவின் படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். இதனை எடுத்து பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து புதிய படத்தை கௌதம் மேனன் இயக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் முடிந்த பிறகு தான் வேட்டையாடு விளையாடு 2 படத்தின் வேலைகளை கௌதம் மேனன் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

கௌதம் மேனன் அளித்த பேட்டி:

அது மட்டும் இல்லாமல் கௌதம் மேனன்- விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படத்தின் பணிகளும் கூடிய விரைவில் முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கௌதம் மேனன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் தோல்விக்கான காரணத்தை குறித்து கூறியிருந்தது, நல்ல படமாக தான் இந்த படத்தை எடுக்க முயற்சி செய்தோம். ஆனால், எங்களுக்கு தோல்வியில் தான் சந்தித்தது. அந்த படத்தின் தோல்விக்கு பல காரணங்கள் இருக்கிறது.

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் தோல்விக்கு காரணம்:

அது ஒரு படமாகவே என்னால் முழுமையாக முடிக்க முடியவில்லை. அந்த படத்தின் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளருக்கும், தனுஷுக்கும் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதன் காரணமாக தனுஷுக்கு அந்த படத்தின் மீது பெரிய அளவில் ஆர்வமும் இல்லை. ஒரு கட்டத்தில் படத்தை முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்காக வேகமாக படத்தை எடுத்து முடித்தோம். மறுவார்த்தை பாடலை கூட நாங்கள் நினைத்தது போலவே எடுக்க முடியவில்லை. அதன் பின்னர் அவரை ஒரு விழாவில் பார்த்த போது என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி போய்ட்டார். என் மீது கோபமாக இருக்கிறாரா என்பது தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

Advertisement