அதுக்கப்புறம் நானும் அஜித்தும் பேசவே இல்லை. ரகசியத்தை உடைத்த கௌதம் மேனன்.

By Rajkumar · 1/12/2019

கௌதம் மேனன் படம் என்றாலே ரசிகர்கள் எல்லோரும் பயங்கர குஷி ஆகி விடுவார்கள். அதுமட்டும் இல்லாமல் அவருடைய படத்திற்கு என ஒரு தனி இளைஞர் கூட்டம் உள்ளது என்று சொல்லலாம். அவருடைய படங்கள் எல்லாம் காதல், ரொமான்டிக் என்று இளைஞர்கள் மனதை கொள்ளையடிக்கும் அளவில் இருக்கும். அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் இவரும் ஒருவர். இதனை தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் சமீபத்தில் தல அஜித் குறித்து ஒரு பேட்டியில் பேசி உள்ளார். அதில் அவர் கூறியது, அஜித் படத்தை இயக்க முதலில் எனக்கு வாய்ப்பு வந்தது. மேலும்,அவரை வைத்து ரீமேக் படம் எடுக்க சொல்லி அனைவரும் என்னிடம் கேட்டார்கள். ஆனால், நான் அதை மறுத்து விட்டேன்.

Ennai Arinthal

அதுமட்டும் இல்லாமல் அஜித் சாரும் உடனே வேண்டாம் என்று கூறி உலகநாயகன் கமல்ஹாசன் படம் 'வேட்டையாடு விளையாடு' மாதிரி ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு பின்னால் தான் நான் அஜித் சாரை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கினேன். மேலும், இந்த படம் 2015 ஆம் ஆண்டு திரை உலகிற்கு வந்தது. மேலும், இந்த படம் மக்களிடையே பயங்கர வரவேற்பையும் பெற்றது என்று சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் இந்த படம் நல்ல வெற்றியை தந்தது. மேலும், என்னை அறிந்தால் படத்திற்கு பின்னர் நானும், அஜித் சாரும் ஒருவருக்கு ஒருவர் சந்தித்து பேசவே இல்லை. அதுமட்டும் இல்லாமல் அதற்கான வாய்ப்புகளும் எங்களுக்கு கிடைக்கவில்லை. மேலும், அஜித் சார் அவருக்கு உண்டான ஒரு வட்டாரத்திற்கு பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார்.

இதையும் பாருங்க : இதனால் தான் ஆர்யா திருமணத்திற்கு வரவில்லை. மனம் திறந்த முன்னாள் காதலி பூஜா.

மேலும், நான் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதுமட்டும் இல்லாமல் அவர் விரும்பினால் மீண்டும் இணைவோம். அதோடு அது "என்னை அறிந்தல் 2" ஆக கூட இருக்கலாம் என்று கூறி உள்ளார். அப்போ என்னை அறிந்தால் 2 படம் கௌதம் மேனன் அவர்கள் எடுக்க உள்ளார் போல என்ற தகவல் வெளியானது. இது குறித்து அஜித் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளார்கள் என்று தெரிய வந்து உள்ளது. மேலும், சில தினங்களுக்கு முன் தான் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த "என்னை நோக்கி பாயும் தோட்டா" படம் திரையரங்குகளில் வெளியானது.

Ennai Arinthal

மேலும், இந்த படம் குறித்து ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் வருகின்றன. இந்த படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்து உள்ளார். அதோடு இந்த படம் அதிரடி, சண்டை, ஆக்ஷன், காதல், ரொமான்டிக் என கலவையான கமர்ஷியல் படமாக உள்ளது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் கௌதம் மேனனின் அடுத்த படம் அஜித்தை வைத்து இருக்குமோ?? என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றார்கள். ஆனால், தல அஜித் அவர்கள் இப்ப தான் "விசுவாசம், நேர்கொண்ட பார்வை" என சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து விட்டு தற்போது "வலிமை" என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full