இதனால் தான் ஆர்யா திருமணத்திற்கு வரவில்லை. மனம் திறந்த முன்னாள் காதலி பூஜா.

0
83956
Arya-Pooja
- Advertisement -

நடிகர் ஆர்யா திருமணத்திற்கு நடிகை பூஜா வராதது தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தன. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. மேலும்,இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து ஒரு கல்லூரியின் கதை, பட்டியல், நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, ராஜா ராணி ,இரண்டாம் உலகம், கஜினிகாந்த் என பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், நடிகை பூஜா அவர்கள் ஆர்யாவுடன் இணைந்து நான்கு படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர்கள் இருவரும் காதலித்ததாகவும் கூறப்பட்டது. பூஜா பிறந்து வளர்ந்தது எல்லாம் இலங்கையில் தான். இவர் இந்தியாவிற்கு படிப்புக்காக வந்தார். பின் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் நடிகையானர்.

-விளம்பரம்-
Image result for Arya Pooja
ஆர்யா- பூஜா

- Advertisement -

மேலும், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான ஜீவா இயக்கத்தில் ‘உள்ளம் கேட்குதே’ என்ற படத்தில் தான் நடிகை பூஜா முதன் முதலாக நடித்தார். ஆனால், இந்த படம் ரிலீசாக தாமதமானதால் சரண் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜே ஜே’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பிறகு ஜித்தன், பட்டியல், தம்பி, நான் கடவுள், ஓரம் போ, துரோகி, விடியும் முன் என பல படங்களில் நடித்தார். பின் தமிழ் படங்களில் நடிக்காமல் தன்னுடைய இலங்கைக்கு சென்று விட்டார். பின் அங்கேயே பல படங்களில் நடித்து வந்தார். மேலும்,இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் இவர் இலங்கையை சேர்ந்த தமிழ் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தான் பூஜா அவர்கள் சென்னை வந்து உள்ளார்.

இதையும் பாருங்க : 90ஸ் கிட்ஸ் மறக்க முடியாத தொகுப்பாளினி பெப்ஸி உமா என்னவானார் ?

அப்போது அவர் பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். பின் என்னுடைய நெருங்கிய நண்பர் ஆரியாவின் கல்யாணத்திற்கு வராத காரணம் குறித்து தெரிவித்தார். அது என்னவென்றால் நடிகை பூஜா அவர்கள் கல்யாணத்தின் போது அவர் ஆஸ்திரியாவில் இருந்ததால் தான் வரவில்லை என்றும் கூறினார். அதோடு நடிகர் ஆர்யா உடன் இணைந்து நான்கு படங்களில் நடித்திருந்தாலும் ஆரம்பத்தில் பூஜாவுக்கும்– ஆர்யாவுக்கும் காதல் என பல கிசு கிசுக்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்தன. இதனை உறுதி செய்யும் விதமாக இவர்கள் படங்களில் நடித்தார்கள். இவர்களுடைய காதல் கரை சேரவில்லை. அதுமட்டுமில்லாமல் இவர்கள் உண்மையாகவே காதலித்து வந்தார்களா? இல்லையா? என்ற கேள்விகளும் எழுந்து உள்ளன.

-விளம்பரம்-
Image result for Arya Pooja
ஆர்யா- பூஜா

இதனை தொடர்ந்து ஆர்யாவுடன் பல நடிகைகளை ஒப்பிட்டு பல விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தி வந்தனர் நெட்டிசன்கள். ஆனால், நடிகர் ஆர்யா அன்பே ஆருயிரே படத்தின் கதாநாயகியான நிலா சோப்ராவை காதலித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், அவர்கள் பிரிந்து விட்டார்கள். சமீப காலமாகவே ஆர்யா குறித்து சமூக வலைதளங்களில் எந்த ஒரு கருத்தும் இல்லாமல் உள்ளது. ஆனால், அதற்கு முன்னர் வரை ஆர்யா தான் சமூக வலைத்தளங்களின் சர்ச்சையை நாயகனாக இருந்தார். அது மட்டுமில்லாமல் சினிமா உலகில் ‘பிளேபாய், ரோமியோ’ என்று அவரை குறித்து பல கிசு கிசுக்கள் வந்துள்ளன.

மேலும், அவர் அதையெல்லாம் பொருட்படுத்தி கொள்ளாமல் ஜஸ்ட் லைக் தட் ஆக செய்து விட்டு போனார். பின் ரொம்ப காலமாகவே சிங்கிள் தான் கெத்து என சுற்றிக் கொண்டிருந்தார் ஆர்யா. பின்னர் கஜினிகாந்த் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த சயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது நம்ப ஆர்யா ஃபேமிலி மேன் ஆக மாறிவிட்டார். அதுமட்டுமில்லாமல் தற்போது கோலிவுட்டின் க்யூட்டான ஜோடியாக இவர்கள் வருகிறார்கள்.

இதனால் தான் திருமணத்திற்கு வரவில்லை. முதன் முறையாக மனம் திறந்த பூஜா.

Advertisement