தனுஷ் படம் தொடர்பான கேள்விக்கு கெளதம் வாசுதேவ் மேனன் அளித்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோலிவுட்டில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் கௌதம் வாசு தேவ் மேனன். தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை இருக்கிறது.

அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட். இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார். அதற்கு பின் இவர் இயக்குனர் ராஜீவ் மேனனிடம் தான் உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் மின்னலே படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதன் பின்னர் இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார்.
கௌதம் மேனன் திரைப்பயணம்:
மேலும், இவர் இயக்குனர் மட்டுமில்லாமல், நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். பின் இவர் சிம்புவை வைத்து இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான்இசையமைத்து இருந்தார்.

கௌதம் மேனன் படங்கள்:
இதை அடுத்து கடந்த ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி, இயக்கி எடுத்த படம் ஜோஷ்வா இமை போல் காக்க. இந்த படம் ஆக்சன் திரல்லர் பாணியில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் வருண், கிருஷ்ணா, யோகி பாபு, ராஹோ, மன்சூர் அலிகான், விசித்ரா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. தற்போது கௌதம் மேனன் நடித்தும் இயக்கியும் வருகிறார்.
கௌதம் மேனன் பேட்டி:
தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் உருவாகி இருக்கும் படம் ‘Dominic and the Ladies Purse’. இந்த படத்தின் மூலம் தான் இவர் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆக இருக்கிறார். இந்த படத்தை மம்மூட்டியே தயாரித்திருக்கிறார். இந்த படம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
#GauthamVasudevMenon said #EnaiNokkiPaayumThotta 🎬 is not my film, it is somebody else's flim😧#Gauthammenon #GVM #GauthamVasudevMenon #AjithKumar #VidaaMuyarchi #Rajinikanth #Coolie #Suriya45 #SK25 #Dhanush #Chiyaan63 #JR34 #ThugLife
— வேடிக்கை பார்ப்பவன் (@Vedikaiparpavin) January 19, 2025
pic.twitter.com/5wqcMzgjhK
தனுஷ் படம் பற்றி சொன்னது:
அந்த வகையில் சமீபத்தில் கௌதம் மேனன் அளித்த பேட்டியில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு கௌதம் மேனன், பதிலளிக்காமல் பாதியிலேயே நிறுத்திவிட்டார். பின் அவர், அந்த படத்தின் பெயர் என்ன சொன்னீர்கள்? எனக்கு அதில் ஒரு பாடல் மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது. அந்த படத்தை நான் இயக்கவில்லை. வேறு யாரையாவது இயக்கி இருப்பார்கள் என்று கூறி இருந்தார். இதன் மூலம் தனுஷ்-கௌதம் மேனன் இடையே சர்ச்சை இருப்பது தெளிவாக தெரிகிறது.






