உங்க படத்துல ரோமன்ஸ் பண்ணவங்கல, ஸ்ருதியுடன் ரொமான்ஸ் செய்த லோகேஷை வச்சி செய்த காயத்ரி.

0
438
- Advertisement -

கமல்ஹாசன் மகளுடன் லோகேஷ் கனகராஜ் செய்து இருக்கும் ரொமான்ஸ் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் சம்பாதித்து சாதனை படைத்து வருகிறது. ஆரம்பத்தில் இவர் ஒரு தனியார் வங்கியில் தான் வேலை செய்து வந்தார்.

-விளம்பரம்-

பின் இவருக்கு சினிமா மீது இருந்த ஆசையால் தன்னுடைய திரை பயணத்தை “களம்” என்ற குறும்படத்தின் மூலம் தான் தொடங்கினார். அதன் பின் இவர் “மாநகரம்” என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சஸை கார்த்தி நடித்த “கைதி” படத்தின் மூலம் தொடங்கினார். அதன் பிறகு வந்த மாஸ்டர், விக்ரம் என பெரிய நடிகர்களை வைத்து பிரம்மாண்ட அளவில் ஹிட் கொடுத்துள்ளார் லோகேஷ்.

- Advertisement -

லியோ படம்:

இதனை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து “லியோ” படத்தை என்ற இயக்கி இருக்கிறார் லோகேஷ்.
மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தட், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் அதிரடி ஆக்சன் பாணியில் இருந்தது. விஜய்யின் லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள்.

தலைவர் 171 படம்:

இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எல்லாம் ஏற்கனவே வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்டுகான வேலையில் தான் லோகேஷ் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் கடந்த மாதம் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில் கமலஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும், லோகேஷ் கனகராஜூம் இணைந்து பணியாற்றி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

ஆல்பம் பாடல்:

இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இருவரும் கூட்டணியில் படம் உருவாகிறதா? என்று கேட்டிருந்தார்கள். தற்போது இது தொடர்பான புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதாவது, ஸ்ருதிஹாசன்- லோகேஷ் கனகராஜ் இருவரும் ஆல்பம் பாடல் ஒன்றில் பணியாற்றி இருக்கிறார்கள். இதில் ஹீரோவாக லோகேஷ் களமிறங்கி இருப்பது ஆச்சரியம் தான். இந்த பாடலை ஸ்ருதிஹாசனை கம்போஸ் செய்திருக்கிறார். இனிமேல் என இந்த பாடல் தொடங்குகிறது. இந்த பாடலின் வரிகளை கமலஹாசன் எழுதி இருக்கிறார்.

காயத்திரி பதிவு:

மேலும், இந்த பாடலை கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. இந்த பாடல் வருகிற மார்ச் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் இந்த பாடலின் டீசரை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த டீசரில் ஸ்ருதிஹாசனும் லோகேஷும் பயங்கரமாக ரொமான்ஸ் செய்து இருக்கிறார்கள். இதை பார்த்து ரசிகர்களுக்கு பலருக்குமே ஷாக் என்று சொல்லலாம். காரணம், லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களில் ஹீரோயின்களை கருணையே இல்லாமல் கொலை தான் செய்வார். தற்போது இந்த ரொமான்ஸ் வெர்ஸன் பார்க்கும் போது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து விக்ரம் பட நடிகை காயத்ரி கலாய்த்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், உங்க படத்தில் ரொமான்ஸ் பண்ணா தலைய வெட்டிட்டு, லோகேஷ் என்னம்மா இதெல்லாம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement