ஆரவ் பரோட்டா, ஜூலி ஜூஸ், ஓவியா பிரியாணி! ட்விட்டரில் கலாய்த்த காயத்ரி?

0
1312

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது.இந்த நிகழ்ச்சிக்கு பலரும் அடிமையாகிவிட்டனர்.
Bigg Bossஇதில் பல்வேறு திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு இதுவே பெரும் பலமாக அமைந்தது. பல்வேறு கமெண்ட்டுகள் ,சர்ச்சைகளை தொடர்ந்து ஒரு வழியாக பிக் பாஸ் 100 நாட்கள் நடந்தது முடிந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களின் நிலை இப்போது வேறு லெவல் ஆகிவிட்டது.நடிகை ஓவியா பட வாய்ப்புகள் மற்றும் விளம்பரங்களில் பிஸி ஆகிவிட்டார்.

- Advertisement -

ஆரவ் கதாநாயகன் ஆகிவிட்டார்.ஜூலி பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினி ஆகிவிட்டார்.ரைசா கதாநாயகி ஆகிவிட்டார்.
bigg boss பிக் பாஸ் நிகழ்ச்சியின் மவுசு குறைந்த நிலையில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் தனது ஹொட்டலில் பண்டங்களுக்கு ‘கமல் காம்போ’ என்றும் இதில், காயத்திரி சூப், ஓவியா பிரியாணி, ஆரவ் புரோட்டா, ஜுலி ஜுஸ் என ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டு மெனு போடப்பட்டுள்ளது.
gayathri இதை காயத்ரி தன் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Advertisement