புதுக்கட்சியில் சேர்ந்தவுடன் நடிகை காயத்ரி ரகுராம் செய்து இருக்கும் வேலை தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி ரகுராம். இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டரின் மகள் ஆவார். காயத்ரி ரகுராம் அவர்கள் நடிகை மட்டும் இல்லாமல் நடன இயக்குனரும் ஆவார். இவர் சில படங்களில் நடித்தார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.
அதற்கு பின் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். இருந்தாலும், இவருக்கு பெரியதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் இவர் அரசியலில் குதித்தார். அதன் பின் காயத்திரி BJP கட்சியில் இணைந்து தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவர் BJP யில் இருந்தாலும் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இவர் தமிழ் நாட்டு மற்றும் அயல்நாட்டு தமிழ் வளர்ச்சி துறையில் தலைவராக இருந்தார். இவர் பாஜக கட்சியில் சேர்ந்ததில் இருந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி இருந்தார்.
காயத்ரி ரகுராம் அரசியல்:
குறிப்பாக, காயத்ரி ரகுராம் ஒவ்வொரு முறை உயர் பதவி பெரும் போதும் இவரது பெயர் அடிப்பட்டு விமரிசிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. அதோடு கட்சியில் உள்ள மற்ற கட்சியினரின் உளவாளி என்பவர்களில் இவரது பெயர் பலமுறை அடிபட்டு வந்தது. இதனால் இவரை பாஜகவில் இருந்த பதவியில் இருந்து நீக்கம் செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. பின் மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கும், காயத்திரி ரகுராமுக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்தது.
மக்களின் எண்ணங்களுக்கு உயிரூட்டி, அவற்றை நிறைவேற்ற களத்தில் தொடர்ந்து போராடும் இயக்கமாக இருக்கிறது அதிமுக. இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் நலனுக்கு முன்னுரிமை, பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏற்றங்களுக்கு துணை நிற்பது போன்ற சமூக ஏற்றங்களுக்கு காரணமாக உள்ளது அதிமுக. 50… pic.twitter.com/l4ScVtGOPi
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) January 19, 2024
காயத்ரி ரகுராம் குறித்த சர்ச்சை:
இது சமூக வலைத்தளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் கோபம் அடைந்த காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகினார். இருந்தும் அண்ணாமலை குறித்து விமர்சித்து இருந்தார். தற்போது காயத்ரி ரகுராம் அவர்கள் அதிமுக எடப்பாடி கட்சியில் சேர்ந்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் இவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். மேலும், புது கட்சியில் இணைந்த உடனே எதிர்க்கட்சியை விமர்சித்து காயத்ரி பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.
2020 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வெறும் 2% வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. தமிழகத்தில் 2% வாக்குகள் மட்டுமே உள்ளவர்களை திமுக எதிர்க் கட்சி என்று நினைத்தால் அது நல்லதல்ல.
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) January 19, 2024
காயத்ரி பதிவு:
அதில் அவர், அதிமுக உங்கள் எதிர்க்கட்சி அல்ல என்று நீங்கள் கற்பனை செய்து கொண்டிருந்தால் திமுக மோசமான நிலையில் இருக்கும். அப்படியானால் தமிழகத்தில் பாஜகவுக்கு மறைமுகம் ஆதரவு திமுக கொடுக்கிறதா? தயவுசெய்து ஏமாறாதீர்கள் என்று கூறி இருக்கிறார். பின் இன்னொரு பதிவில்,
2020 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வெறும் 2% வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.
நெட்டிசன்கள் விமர்சனம்:
தமிழகத்தில் 2% வாக்குகள் மட்டுமே உள்ளவர்களை திமுக எதிர்க் கட்சி என்று நினைத்தால் அது நல்லதல்ல என்று கூறி இருக்கிறார். தற்போது இவரின் பதிவுதான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், காயத்ரி ரகுராமை ட்ரோல் செய்தும் இதிலாவது நீடிப்பாயா? என்றெல்லாம் கிண்டலடித்தும் வருகிறார்கள்.