உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறியுள்ள ஜென்டில் மேன் பட நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி.

0
2157
subashree
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை எத்தனையோ நடிகைகள் ஒரு சில படங்களிலேயே காணாமல் போய் விடுகின்றனர். அதிலும் 90ஸ் காலகட்டத்தில் நடித்த நடிகைகள் சிலர் என்ன ஆனார்கள், எப்படி இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் போய் விடுகிறது. அந்த வகையில் தமிழில் ஜென்டில் மேன், முத்து போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகை சுபஸ்ரீ என்னவானார் என்பது பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சினிமா திரை உலகில் பிரமாண்டம் என்றால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது இயக்குனர் ஷங்கர் தான். மேலும், சினிமாவில் படங்களை இயக்குவதில் தனக்கென ஒரு பாதையையும், வித்தியாசமான கதைக் களத்தையும் கொண்டவர்.

-விளம்பரம்-

இவருடைய படங்கள் எல்லாம் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் ஷங்கர் படத்துக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றும் சொல்லலாம். இவர் முதன் முதலாக ஜென்டில் மேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அர்ஜுன், மதுபாலா, நம்பியார், மனோரமா, கவுண்டமணி, செந்தில் போன்ற பலர் நடித்த இந்த படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்தவர் சுபஸ்ரீ.

இதையும் பாருங்க : அயன், காப்பான் பட இயக்குனர் கே வி ஆனந்த் திடீர் மரணம் – என்ன காரணம் தெரியுமா ?

- Advertisement -

இவர் ‘ஜென்டில்மேன்’ படத்திற்கு முன்பாகவே பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘எங்க தம்பி’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது ஜென்டில்மேன் திரைப்படம் தான். அந்த திரைப்படத்திற்குப் பின்னர் தமிழில் இவர் முத்து, ஆறுச்சாமி, மைனர் மாப்பிள்ளை போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். அதுபோக தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்திருந்தார் சுபஸ்ரீ.

சுபஸ்ரீ

1997 க்கு பிறகு சுபஸ்ரீ வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. மேலும் இவர் பிரபல கன்னட நடிகை மாலஸ்ரீயின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் தனது சகோதரி மற்றும் குடும்பத்துடன் சுபஸ்ரீ அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement