என்னது கில்லி படத்தில் விஜய் அம்மாவாக நடித்த நடிகை விஜயை விட வயதில் சின்னவாரா? எவ்வளவு வித்யாசம் தெரியுமா?

0
131
- Advertisement -

கில்லி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகை விஜயை விட வயதில் இளையவர் என்ற தகவலை நெட்டிசன்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் கில்லி. இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் வெளியாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றிருந்தது. எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் கில்லி திரைப்படத்திற்கும் ஒரு இடம் உண்டு. மேலும், கில்லி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து பல்வேறு திரையரங்குகளில் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. சமீப காலமாக முக்கிய நடிகர்களின் படங்கள் ரிலிஸ் ஆகாத சமயத்தில் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைவதால் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான படங்களை திரையிட்டு வருகின்றனர் திரையரங்க உரிமையகர்கள் அந்த வகையில் கில்லி படம் 20 ஆண்டுகளை கடந்த நிலையில் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

கிட்டதட்ட 500 திரைகளில் படத்தை சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட்டுள்ளது. என்னதான் ரீ-ரிலீஸ் படம் என்றாலும் எதோ புது படம் வெளியானது போது திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். உலகம் முழுவதும் கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.20 கோடியை எட்டி புதிய சாதனையை படைத்துள்ளது. மூன்று நாட்களுக்குப் பிறகு படத்தின் உள்நாட்டு வசூல் சுமார் 10.50 கோடியாக உள்ளது.

மேலும், சமூக வலைத்தளத்தில் கடந்த சில தினங்களாக கில்லி படம் குறித்த பதிவுகள் வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த நடிகை ஜானகி சபேஷ், விஜயை விட வயதில் சின்னவர் என்ற தகவலை நெட்டிசன்கள் தோண்டி எடுத்துள்ளனர். அதாவது விஜய் பிறந்த தேதி 22-06-1974. இந்த படத்தில் நடித்த ஜானகி பிறந்த தேதி 23-09-1974. அதாவது விஜயை விட ஜானகி மூன்று மாதங்கள் சிறியவர்.

-விளம்பரம்-

விஜய்க்கு மட்டுமல்ல தன்னை விட வயதில் மூத்த நடிகையான ஐஸ்வர்யா ராய்க்கு அம்மாவாக நடித்துள்ளார் ஜானகி. ஆம், ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘ஜீன்ஸ்’ படத்தில் கூட ஐஸ்வர்யா ராய்க்கு அம்மாவாக நடித்து இருந்தார் ஜானகி. உன்மையில் இவரை விட ஐஸ்வர்யா ராய் இவரை விட ஒரு வருடம் வயதில் மூத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement