அட, கில்லி பட விஜய் அம்மாவுக்கு இவ்வளவு பெரிய மகளா ? இதோ புகைப்படம்.

0
954
gilli
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் திரைப் படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடிப்பவர் நடிகை ஜானகி சபேஷ். இவர் சினிமாவில் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா போன்ற பல நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். நடிகை ஜானகி சபேஷ் அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்து அசத்தி உள்ளார். திரையுலகில் அம்மா கதாபாத்திரம் என்றாலே அது இவருக்குத் தான் கொடுக்கப்படும். அந்த அளவிற்கு இவர் திறமையாகவும், இயல்பாகவும் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-33.png

நடிகை ஜானகி சபேஷ் அவர்கள் ஜீன்ஸ், குஷி, ஜோடி, அயன், வேட்டையாடு விளையாடு, சிங்கம்-1,2 உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர(அம்மா) நடிகையாக நடித்து உ ள்ளார். குணச்சித்திர(அம்மா) நடிகையாக மக்களிடையே பிரபலமானது விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி படத்தின் மூலம் தான். கில்லி படத்தில் இவருடைய நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் தற்போது வரை நீங்கா இடம் பிடித்து உள்ளார்.

- Advertisement -

பொதுவாக இவர் படங்களில் குறும்பு செய்யும் பசங்களுக்கு சப்போர்ட் செய்யும் வெள்ளந்தியான, வெகுளியான அம்மா ரோலில் தான் நடித்து உள்ளார். இதனாலேயே இவர் இளைஞர்கள் மத்தியில் சீக்கிரம் இடம் பிடித்தார் என்றும் சொல்லலாம். அதோடு படத்தில் இவருடைய ஒவ்வொரு டயலாக்கும், நடிப்பும் வேற லெவல்ல. இந்நிலையில் இப்படி வெள்ளந்தியான அம்மா, நடிகையான ஜானகி சபேஸ்க்கு ஒரு மகள் உள்ளார்.

This image has an empty alt attribute; its file name is image-32.png

அவருடைய பெயர் தவானி. தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் எல்லோரும் கில்லி அம்மாவுக்கு இவ்வளவு அழகான மகளா!! என்று ஆச்சரியத்தில் உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் அந்த புகைப்படத்தை அதிகமாக ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள் நெட்டிசன்கள்.

-விளம்பரம்-
Advertisement