எல்லாரும் சொல்றமாதிரி அஜித் இல்லை.! இசையமைப்பாளர் கிப்ரான்.!

0
967
Ajith-Gibran
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக விளங்கி வருகிறார். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. அதே போல இவருக்கு திரைத்துறையில் பல்வேறு கலைஞர்கள் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் அஜித்தை பற்றி இசையமைப்பாளர் ஜிப்ரான் பேட்டி ஒன்றில்புகழ்ந்த்துள்ளார். வாகை சூடவா’ திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஜிப்ரான். ‘வாகை சூடவா’, ‘விஸ்வரூபம்2’,‘உத்தம வில்லன்’,‘பாபநாசம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

- Advertisement -
Image result for Gibran And Ajith

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”இது உண்மையான ரசிகனுக்கான தருணம். எல்லோரும் சொல்வதை போலவும், அதைவிட சிறந்தவராகவும் அஜித் குமார் இருக்கிறார். அவர் என்னிடம் நிறைய பேசினார். ஆனால் ”நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்” என்பது மட்டும் என் காதில் திரும்ப திரும்ப ஒலிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமாருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஜிப்ரான் பகிர்ந்துள்ளார். விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement