காதலர் விஷயத்தில் அல்வா கொடுத்த கில்லி பட நடிகை ஜெனிபர் – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
869
- Advertisement -

பொதுவாகவே சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் பிரபலமான முன்னணி நடிகையாக பல பேர் இருந்து இருக்கிறார்கள். பேபி ஷாலினி, மீனா தொடங்கி என பல நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். அந்த வகையில் விஜயின் படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஜெனிஃபர். இவர் ஆரம்பத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். பின் இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் கொடுத்த படம் கில்லி. மேலும், கில்லி படத்தின் டிஆர்பியை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படம் வேற லெவல் வெற்றியடைந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய்யின் தங்கையாக ஜெனிஃபர் நடித்திருந்தார். கில்லி படத்திற்கு முன்னதாகவே விஜய்யின் நேருக்கு நேர் படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்து கில்லி திரைப்படம் தான். இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இவர் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவு இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்த படத்தை அடுத்து இவர் தீயா வேலை செய்யணும் குமாரு, பேரான்மை போன்று சில படத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

ஜெனிபர் வெள்ளித்திரைப் பயணம்:

பின் சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். சீரியல்களில் வில்லியாகவும், பாசிட்டிவ் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அதோடு எல்லா சேனல்களிலும் கிடைக்கும் ரோல்களில் ஜெனிஃபர் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பு, நடனம், நகைச்சுவை என அணைத்து திறைமைகளை கொண்டவர். ஜெனிபர், நடிகை கதாப்பாத்திரத்திற்கு எவ்வளவோ முயற்சித்து பார்த்துவிட்டாராம். ஆனால், அவருக்கு நடிகையாக நடிக்க யாருமே வாய்ப்பு வழங்கவில்லையாம்.

ஜெனிபர் சின்னத்திரை பயணம்:

அதற்கான காரணம் என்ன என்றும் அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். கில்லி படத்தில் தங்கச்சி வேடத்தில் நடித்ததால் இன்னும் அவரை சின்ன ரோலில் நடிக்கவே கூப்பிடுகின்றார்களாம். சமீப காலமாக அம்மணிக்கு சீரியல் வாய்ப்புகள் கிடைத்த பாடில்லை. இறுதியாக சன் தொலைக்காட்சியில் ஸ்டார் வார் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்குபெற்றார். இருந்தாலும் இவர் எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தான் எடுக்கும் போட்டோஷூட் புகைப்படம்,வீடியோ என்று எதையாவது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

ஜெனிபர் காதலிக்கும் நபர்:

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஜெனிபர் யூடியூப் சேனல் ஒன்றில் தான் ஒருவரை காதலிப்பதாக ஓபனாக சொல்லி இருந்தார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலானது. இவர் காதலிப்பது தெரிந்து உடனே ரசிகர்கள் எல்லோரும் சோசியல் மீடியாவில் வாழ்த்து மழையை பொழிய ஆரம்பித்து விட்டார்கள். பின் உங்களுடைய லவ்வர் யார்? என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் ஜெனிபர் காதல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ஜெனிபர் யாரையும் காதலிக்கவில்லையாம்.

ஜெனிபர் காதல் குறித்து திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்:

அது ஜோதிடர் ஒருத்தருக்கு புரொமோஷன் தருகிற ஒரு நிகழ்ச்சியாம். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தான் ஜெனிபர், ஆமா நான் காதலிக்கிறேன் என்று சொல்லி இருக்காங்க. ஆனால், ‘இப்ப இல்லைங்க அது சும்மா’ என்று சொல்லி இருக்காங்க. இதன் மூலம் ஜெனிபர் யாரையும் காதலிக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் எதற்கும் ஒரு அளவு வேண்டாமா? எதில் விளையாடுவது என்று அறிவு இல்லையா? இப்படியெல்லாமா பண்ணுவீர்கள்? என்று கோபத்தில் ஜெனிபரை திட்டி வருகிறார்கள்.

Advertisement