ஊரே அவன காரி துப்புது, நான் உள்ள இருந்தா பளார்னு அறஞ்சி இருப்பேன் – அசீமை வெளுத்து வாங்கிய சமையல் மந்திரம் கிரிஜா.

0
668
azeem
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்பாக சென்று வருகிறது. நிகழ்ச்சியை விறுவிறுப்பாக பிக் பாஸும் பல டாஸ்க்குகளை போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறது. அதற்கு தகுந்தாற் போலவே போட்டியாளர்களும் தீவிரமாக விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் தான்.

-விளம்பரம்-

இதுவரை பல முறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் நாமிநேஷனில் வாக்குகளை பெற்று காப்பாட்றப்பட்டு வருகிறார். என்பதான் இவர் ஆக்ரோஷமாக விளையாடி வந்தாலும் இவர் தான் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறது என்று சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து தான் வருகின்றனர். ஆனால், அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அசீம்.

- Advertisement -

அசீம் விஜேவாக அறிமுகமாகி பின்னர் பின் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு, காமெடி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். இவர் சில நிகழ்ச்சிகளை கூட தொகுத்து வழங்கி உள்ளார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் பூவே உனக்காக என்ற சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இவர் நடிக்க ஆரம்பத்திலிருந்தே டாப் கியரில் சென்று கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போது டிஆர்பியில் இந்த சீரியல் தான் முந்தி இருந்தது.

தற்போது அசீம் பிக் பாஸ் சீசன்6 போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அசீம் சின்னத்திரை நடிகராகவும் தொகுப்பாளராகவும் இருக்கும் போது அசீமுடன் சக நடிகையாக பணியாற்றிவந்த பிரபல தொகுப்பாளனியான சமையல் மந்திரம் கிரிஜா ஸ்ரீ பிரபல ஊடகம் ஒன்றில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன்6 போட்டியாளர்களை பற்றியும் பிக் பாஸ் தொகுப்பாளராக கமலஹாசன் பற்றியும் தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார். அப்போது அசீமை பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

அந்த வீடியோவில் நடிகை கிரிஜா கூறியதாவது அசீம் நினைப்பது போல ஆண் பெண் என்ற வேறுபாடுகள் எல்லாம் எப்போதோ மலையேறிவிட்டது அதில் அசீம் மிகவும் பின்தங்கி இருக்கிறார். மேலும் அசீம் ஒரு டாக்கில் பிக் பாஸ் வீட்டில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் போட்டியாளர்கள் இருந்த போது அவர்களை தாழ்த்தி பேசியதை நினைவு கூறி அசீம் நான் தான் இந்த பிக் பாஸ் வீட்டில் முதன்மையானவன் என்ற நினைப்பு அவரிடம் இருக்கிறது. அது தவறு கிடையாது ஆனால் அது ஒரு எல்லையோடு இருக்க வேண்டும். அந்த எல்லையை தான்டி மற்றவர்களை அசிங்கப்படுத்தக் கூடாது என்று கூறினார்.

மேலும் தான் அசீமுடன் நான் ஏற்கனவே பணியாற்றியுள்ளேன் அதனால் எனக்கு அவரை பற்றி தெரியும், அசீமினால் பலரும் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்றிருக்கின்றனர். மேலும் அவருடன் நடித்த பல கதாநாயகிகள் அதிகமாக அழுதிருப்பதெல்லாம் நடந்திருக்கிறது என்று நாள் கேள்வி பட்டிருக்கிறேன். இப்போதுதான் இதனை பலரும் பேட்டியில் சொல்லி வருகின்றனர். ஆனால் இந்த விஷியங்கள் எல்லாம் முன்பே நடந்து விட்டது. தொடக்கத்தில் அசீம் முதல் சிரியலில் நடிக்கும்போது நன்றாகத்தான் இருந்தார். ஆனால் அதற்கடுத்து இரண்டு சீரியல்களில் தொடர்ந்து நடித்திருந்தார். அந்த சீரியல்களில் பல பிரச்சனைகள் அசீமினால் வந்தது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார் நடிகை மற்றும் தொகுப்பாளனியான கிரிஜா ஸ்ரீ.

இதற்கு முன்னர் கூட பிரபல சின்னத்திரை நடிகையான தேவிப்பிரியா பேட்டியில் ஒன்றில் அசீம் குறித்து கூறியிருந்தது, அவர் கூறுகையில் சீரியலில் நடித்த நடிகை ஒருவரிடம் அசீம் சண்டை போட்டு இருந்தார். அந்த நடிகை யார்? என்று சொல்ல விரும்பவில்லை. அவருக்கு தமிழ் தெரியாது. அந்த நடிகை ஹைதராபாத்தை சேர்ந்தவர். அவரிடம் அசீம் மிகவும் மோசமாகவே சண்டை போட்டார். செட்டில் இருந்த எல்லோருமே அந்த பெண்ணை தான் சமாதானம் செய்தார்கள். ஹைதராபாத்தில் இருந்து வந்ததால் நீ பெரிய நடிகையா? என்றெல்லாம் அசீம் மரியாதை இல்லாமல் பேசி இருந்தார் என்று தேவிப்பிரியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement