அச்சு அசலாக நயன் போலவே இருக்கும் பெண் – மூக்குத்தி அம்மன் லுக்கில் வெளியிட்ட புகைப்படம்.

0
1221
- Advertisement -

இந்த உலகத்தில் ஒருவரைப் போன்று ஏழு பேர் ஒரே மாதிரி இருப்பார்கள் என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் பிரபலங்கள் போல இருந்தால் அவர்களுக்கு ஏற்படும் பெயரும் புகழும் பற்றி சொல்லவா வேண்டும் அதுவும் டிக் டாக் போன்ற பொழுதுபோக்கு செய்திகள் வந்த பின்னர் அச்சு அசலாக பிரபலங்களை போன்றே இருக்கும் பல்வேறு சாமானிய மனிதர்களின் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவத் துவங்கியது.

-விளம்பரம்-

சமீபத்தில்கூட நடிகை ஐஸ்வர்யா ராயை போன்று இருக்கும் நபர் ஒருவரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. அந்த வீடியோவை வைரலானதை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்துவரும் நயன்தாராவை போன்று இருக்கும் நபரின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

நயன்தாராவைப் பற்றி நாம் என்ன சொல்ல வேண்டியிருக்கா என்ன ? தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா தமிழில் பல ஆண்டுகளாக டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவரைப் போன்றே இருக்கும் பல்வேறு நபர்களின் வீடியோக்கள் சமூக வளைதளத்தில் அடிக்கடி வைரலாக பரவி வந்தது.

அந்த வகையில் அச்சு அசலாக நயன்தாரா போலவே இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் ஒன்று கடந்த சில மாதங்களுக்கு சமூக வலைத்தளத்தில் வைரலானது.அந்த பெண்ணின் பெயர் விஷாஸ்ரீ. இப்படி ஒரு நிலையில் அதே மேக்கப் கலைஞர் காயத்ரி என்ற பெண்ணிற்கு மூக்குத்தி அம்மன் மேக்கப் போட்டு அசத்தி இருக்கிறார். இதோ அந்த புகைப்படங்கள்.

-விளம்பரம்-
Advertisement