தர்ஷனை ஷெரினிடம் விட்டுவிட்டு நீ போய்விடு பிச்சைக்காரி.! தர்ஷன் காதலிக்கு மோசமாக கமன்ட் செய்த நபர்.!

0
4809
tharshan-lover
- Advertisement -

பிக் பாஸ் தர்ஷனுக்கு சனம் ஷெட்டி காதலிக்கிறார் என்பதே கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் தெரியவந்தது. சனம் ஷெட்டி, தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட பார்வையாளராகள் வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவரும் ஒரு மாடல் தான். 2016 ஆம் ஆண்டு மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார். ஆனால், அவரிடம் இருந்து பட்டம் பறிக்கப்பட்ட நிலையில் அதே போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த இவரிடம் தான் அந்த பட்டம் கொடுக்கபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Image result for tharshan lover

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷெரின் மற்றும் வனிதாவுக்கு தர்ஷன் விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய வனிதாதர்ஷனுக்கு ஏற்கனவே வெளியில் ஒரு காதலி இருக்கிறார். அப்படி இருந்தும் நீ அவனிடம் மிகவும் நெருக்கமாக பழகினாள் அதற்கு கள்ளத்தொடர்பு என்று தான் பெயர் என்று கூறியிருந்தார். இதனால் கடுப்பான ஷெரின் எனக்கு தர்ஷன் வெறும் நண்பர் மட்டும்தான் அவருக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தார்.

- Advertisement -

ஆனால், தர்ஷன் மற்றும் ஷெரின் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க அழுதுள்ளார் சனம் ஷெட்டி, அந்த வீடியோவில் என்னால் தர்ஷினின் முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இருக்காது. அப்படி இருந்தால் நான் தர்ஷனிடம் இருந்து விலகி விடுகிறேன் என்றும் கூறியிருந்தார். இருப்பினும் தர்ஷனுக்கு தொடர்ந்து தனது ஆதரவை அளித்து வருகிறார் சனம் ஷெட்டி.

இந்த நிலையில் சனம் ஷெட்டியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர், தர்ஷன் பெயரை வைத்து நீ பிரபலம் தேடி கொள்ளாதே பிச்சைக்காரி என்று பதிவிட்டுள்ளார். மேலும், தர்ஷனை ஷெரினிடம் விட்டு கொடுத்து விட்டு செல், அலு மூஞ்சி என்றும் மிகவும் மோசமாக கமன்ட் செய்தார்.

-விளம்பரம்-

இதனால் கடுப்பான சனம் ஷெட்டி, கண்டிப்பாக கிடையாது, இது ஒரு சர்வதேச நிகழ்ச்சி வேண்டும் என்றால் கூகுள் செய்து கொள். நீ சொல்வதற்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை. முதலில் பிச்சைக்காரி என்பதை தெளிவாக எழுத கற்றுக்கொள் என்று நக்கலாக பதில் அளித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement