விஜய் அண்ணா, நீங்க இல்லாம நான் இந்த நிலைக்கு வந்து இருக்க முடியாது – பிரபல நடிகர் நெகிழ்ச்சி!

0
2813

தளபதி விஜயின் ரசிகர் பட்டாளம் தமிழகம் தாண்டி கேரளா, ஆந்திரா மற்றும் தென்னிந்தியா முழுவதும் பரவியிருப்பது நாம் அறிந்ததே. மெர்சல் படத்தின் வெற்றியின் மூலம் அவரது ரசிகர்கள் கூட்டம் உலகம் முழுவதும் பரவிவிட்டது.
vijay
அதே போல் இதுவரை தளபதி அவர்கள் நடித்த 61 படங்களின் 20க்கும் மேற்ப்பட்ட புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதே போல், படத்தில் 100க்கும் மேற்ப்பட்ட துணை நடிகர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கும் வாழ்வு கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க:
இதை நான் விஜய் அண்ணாவின் பொக்கிஷமாக வைத்துக்கொள்வேன்! பாடலாசிரியர் விவேக்

அவர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெய். கடந்த 2002ஆம் வருடம் இதே நாளில் பகவதி படம் வெளியானது. அந்த படத்தில் விஜயின் தம்பியாக நன்றாக நடித்திருப்பார் ஜெய். தற்போது வரை படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிறது.
jai

- Advertisement -

அதனைக் கொண்டாடும் வகையில், ட்விட்டரில் விஜயுடன் பகவதி படத்தில் எடுத்த புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார். மேலும், ‘
படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிவிட்டது. நான் சினிமாவிற்குள் அதே படத்தில் நான் வந்தேன்.
jai
என்னை நம்பி விஜய் அண்ணன் கொடுத்த அந்த வாய்ப்பினை என் வாழ்நாளில் மறந்துவிட மட்டேன். நீங்கள் இல்லை எனில் தற்போது நான் இங்கு இல்லை’
என மனம் நெகிழ ட்வீட் செய்துள்ளார்.

Advertisement