சூரி வீட்டு திருமணத்தின் போது நகை திருட்டு - எத்தனை பவுன் தெரியுமா ? போலீஸ் விசாரணை.

By Rajkumar · 13/9/2021

சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகரான சூரி ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம். அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமீப காலமாக இவரது காமெடி மக்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது, இருப்பினும் வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் நடிகர் சூரி. தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : பா ஜ க MLA வானதி சீனிவாசனின் மகன் பயணித்த கார் கவிழ்ந்து விபத்து - என்ன நடந்தது ?

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சூரியின் அண்ணன் மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. சூரியின் குடும்பம் கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையாக இருந்து வருவதால், வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் நடிகர் சூரி முன் நின்று நடத்தி வருகிறார். அதேபோலவே அண்ணன் மகள் திருமணத்துக்கான மொத்த ஏற்பாட்டையுமே சூரிதான் கவனித்திருக்கிறார்.

சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் உள்ள திருமணமண்டபத்தில் நடந்தது. அப்போது திருமணத்திற்கு. வந்த மர்ம நபர் ஒருவர் மணமகள் அறையில்புகுந்து ஒன்பதரை பவுன் நகைகளை திருடி சென்றுள்ளான். இந்த திருட்டு தொடர்பாக கீரைத்துரை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full