பா ஜ க MLA வானதி சீனிவாசனின் மகன் பயணித்த கார் கவிழ்ந்து விபத்து – என்ன நடந்தது ?

0
558
vanathi
- Advertisement -

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் அவர்களின் மகன் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நல்லவேளை விபத்தில் அவர் உயிர் தப்பி எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளவர் வானதி சீனிவாசன்.

இவருக்கு ஆதர்ஷ் என்ற 23 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் கோவையில் உள்ள உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். பின் திருமண நிகழ்வு முடிந்த உடன் நேற்று இரவு காரில் சென்னைக்கு தனியாகவே புறப்பட்டிருக்கிறார் ஆதர்ஷ். நள்ளிரவில் சேலம் கொண்டலாம்பட்டி அருகே பட்டர்பிளை மேம்பாலத்தின் வளைவில் திரும்பும் போது சென்டர் மீடியனில் மோதி ஆதர்ஷின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையும் பாருங்க : சூப்பர் சிங்கர் மாளவிகாவிற்கு திருமணம் – மாப்பிளை யார் தெரியுமா ? அழகிய ஜோடியின் புகைப்படம்.

- Advertisement -

இதில் அவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார். தகவலறிந்த பாஜகவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின் ஆதர்சை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு பின் வேறொரு காரில் ஆதர்ஷ் சென்னைக்கு புறப்பட்டார்.

மேலும், விபத்துக்குள்ளான கார் அன்னதானப்பட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த விபத்து குறித்து சோசியல் மீடியாவில் பல வித சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement