குட் பேட் அக்லி படம் ரிலீஸிக்கு பின் அஜித் சொன்னதாக ஆதிக் ரவிச்சந்திரன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விடா முயற்சி’.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படம் மொத்தமாக 150 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. தற்போது நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.
குட் பேட் அக்லி படம்:
இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன் வெளியான இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆதிக் பேட்டி:
இந்நிலையில் படம் ரிலீஸ் ஆன பிறகு அளித்த பேட்டியில் ஆதிக், குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆன பிறகு நான் அஜித் சாரிடம் பேசினேன். அவர், படம் வெற்றி அடைந்து விட்டது. அதை தலையில் எடுத்துக் கொள்ள வேண்டாம். வெற்றியைப் பற்றிய எண்ணத்தை மறந்து விடுங்கள். உங்களின் தோல்விகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லாதீர்கள். உங்களுடைய அடுத்த வேலைகளை கவனியுங்கள். தொடர்ந்து கடினமாக உழையுங்கள் என்று சொன்னார். மேலும், அவருடைய அடுத்த படத்திற்கான இயக்குனர் பற்றி எனக்கு தெரியவில்லை.

அஜித் பற்றி சொன்னது:
அப்படி அஜித் சார் எனக்கு மற்றொரு வாய்ப்பு கொடுத்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். நான் இப்போது என்னுடைய இந்த வெற்றியை நினைத்து சந்தோஷத்தில் இருக்கிறேன். இந்த படத்தில் அனைத்து நடிகர்களின் காட்சிகளும் குறைவாக தான் இருக்கும். அப்படி தான் பிரியா வாரியார் ரோல். இவர் நடித்த கதாபாத்திரத்தில் தெரிந்த முகம் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும் என்று திட்டமிட்டோம். பிரியாவின் நடன காட்சிகளை மக்கள் கொண்டாடுகிறார்கள். என்னை நம்பியதற்கு நன்றி பிரியா என்று கூறியிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=2msbYoMExvM
ஆதிக் ரவிச்சந்திரன் குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளர், நடிகர், பின்னணி பாடகர் என்று பன்முகங்களை கொண்டவர். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகிரா, மார்க் ஆண்டனி போன்ற படங்களை எல்லாம் இயக்கியிருந்தார்.






