ஆதிக்-அஜித் கூட்டணி ஒர்க்கவுட் ஆனதா? ‘குட் பேட் அக்லி’ படம் எப்படி இருக்கு – முழு விமர்சனம் இதோ

0
211
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அஜித் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிருக்கிறார். இந்த படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, சிம்ரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் குட் பேட் அக்லி படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் அஜித் இந்தியாவே நடுங்கும் அளவுக்கு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆக இருக்கிறார். அந்த வேலையால்
அஜித்தினுடைய குடும்பத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வருகிறது. இதனால் திரிஷா மனம் உடைந்து தன் கணவரை விட்டு பிரிந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பிறந்த குழந்தையை கூட பார்க்க விடாமல் திரிஷா தடுக்கிறார். இதனால் அஜித் போலீஸிடம் சரண்டர் ஆகி விடுகிறார். பின் 17 வருடம் கழித்து
தன்னுடைய கேங்ஸ்டர் தொழில் எல்லாம் விட்டுட்டு தன்னுடைய மகனை பார்க்க வருகிறார்.

- Advertisement -

அப்படி வரும்போது அஜித் உடைய மகனை அர்ஜுன் தாஸ் போலீஸ் இடம் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்க வைத்து விடுகிறார். இதனால் நன்றாக இருந்த அஜித் மீண்டும் வில்லனாக மாறுகிறார். அர்ஜுன் தாஸ் ஏன் அஜித்துடைய மகனை ஜெயிலுக்கு அனுப்பினார்? அதற்கான காரணம் என்ன? தன் மகனை ஜெயிலில் இருந்து அர்ஜுன் மீட்டாரா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. இந்த படம் முழுக்க அஜித் ஒன் மேன் ஆர்மியாக கலக்கியிருக்கிறார்.

ஆதித் ஒவ்வொரு ஃபிரேமையும் ரசித்து எடுத்திருக்கிறார். அதில் அவருடைய அஜித் பேன் பாய் நன்றாகவே தெரிகிறது. அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக நல்ல விருந்தாக இருக்கிறது. ஒரு நல்ல அப்பாவாக இருந்து, எல்லோரிடமும் நன்றாக பேசி ஜாலியாக இருந்த அஜித் தன்னுடைய மகனுக்காக எப்படி கெட்டவராக மாறுகிறார் என்பதை காண்பித்திருக்கும் காட்சிகள் எல்லாம் செம மாசாக இருக்கிறது. குறிப்பாக, இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள் எல்லாம் அடி தூளாக இருக்கிறது.

-விளம்பரம்-

இவரை அடுத்து படத்தில் வரும் பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் நிறைய சப்ரைசுகளையும் காண்பித்திருக்கிறார்கள். அஜித்துக்கு அர்ஜுன் தாஸ் வில்லனா? என்று கேட்டவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் கதாபாத்திரத்தை காண்பித்திருப்பது பாராட்டுக்கூடிய விஷயம். ஆனால், சில இடங்களில் பழைய பாடல், சவுண்ட் எஃபெக்ட் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதை கொஞ்சம் மாற்றி இருந்தால் நன்றாக இருக்கும். லாஜிக்கை எதிர்பார்த்தால் படம் பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பை தான் ஏற்படுத்தும். டெக்னிக்களாக இந்த படம் நன்றாக இருக்கிறது. சத்தம் தான் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது. அதேபோல் சில இடங்களில் மங்கலான காட்சிகளாக இருக்கிறது.
மொத்தத்தில் குட் பேட் அக்லி படம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்து என்று சொல்லலாம்.

நிறை:

அஜித்தின் நடிப்பு பிரமாதம்

பிளாஷ்பேக், சண்டை காட்சிகள் எல்லாம் அருமையாக இருக்கிறது

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

கதைக்களம் அருமை

டெக்னிக்கலாகவும் படம் நன்றாக இருக்கிறது

குறை:

சத்தம் கொஞ்சம் அதிகம்

நிறைய லாஜிக் குறைபாடுகள்

அஜித்தை பில்டப் செய்யும் சில காட்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது

மொத்தத்தில் குட் பேட் அக்லி-அஜித் ரசிகர்களுக்கு விருந்து

Advertisement