மீண்டும் ஹீரோவாகும் வில்லன்.! அறம் பட இயக்குனரின் அடுத்த படைப்பு.!

0
1207
Gopi-Nainar
- Advertisement -

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “அறம் ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை புது முக இயக்குனர் கோபி நைனார் என்பவர் இயக்கி இருந்தார். இந்நிலையில் இவரது அடுத்த படைப்பில் நடிகர் பாபி சிம்ஹா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

நடிகர் ஜெய் தற்போது “பார்ட்டி, நீயா 2 ” போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் கோபி நைனார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் நடிகர் ஜெய். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கியது.

- Advertisement -

அதே போல இயக்குனர் கோபி நைனார், நடிகர் ஆர்யாவை வைத்து ஒரு படம் இயக்கபோவதாகவும், அந்த படத்தில் நடிகர் ஆர்யா ஒரு குத்துச்சண்டை வீரராக நடிக்க இருக்கிறார் என்றும் ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்போது அந்த படத்தின் தான் ஜெய் நடித்து வருகிறார்.

Image result for bobby simha

இந்த நிலையில் இந்த படத்தை முடித்து விட்டு இயக்குனர் கோபி நைனார், நடிகர் பாபி சிம்ஹாவை வைத்து இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த படம் ஒரு கமர்சியல் ஆக்ஷன் கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement