தன்னை பற்றி வந்த வதந்திக்கு நடிகர் கௌண்டமணி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்தவர் நடிகர் கௌண்டமணி. தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் கவுண்டமணி காமெடிகள் தற்போதும் ரசிகர்களால் விரும்பப்படும் வருகிறது. எப்போதும் இவரது காமெடிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக இருந்து கொண்டு தான் வருகிறது.ரஜினி கமல் காலம் தொடங்கி தற்போது நிறைய நடிகர்கள் வரை கவுண்டமணி பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

மேலும், இவர் செய்த காமெடிகள் தான் தற்போதுள்ள பல்வேறு காமெடி நடிகர்களின் ரோல் மாடலாக இருந்து வருகிறது. கடந்த சில காலமாக உடல்நிலை குறைவால் இருந்து வரும் கவுண்டமணி படங்களில் இருந்து நடிப்பதையும் நிறுத்தி விட்டார்.80 காலகட்டங்களில் தொடங்கி 20 காலம் முதல் பல்வேறு படங்களை நடித்துள்ளார் கௌண்டமணி. மேலும் , இவருக்கென்று மூன்று தலைமுறை ரசிகர்களும் இருந்து வருகின்றனர். இறுதியாக 2016 ஆம் ஆண்டு வாய்மை என்ற படத்தில் நடித்திருந்தார். இறுதியாக கிரேசி மோகனின் இறுதி சடங்கு நடைபெற்றது இதில் திரையுகை சென்ற பல்வேறு நடிகர் நடிகைகளும் கலந்து கொண்ட போது கிரேசி மோகனுக்கு இறுதி அஞ்சலியை தெரிவித்திருந்தனர்.

Advertisement

இதில் கௌண்டமணியும் கலந்து கொண்டார்.அப்போது தான் இவர் மீடியா கண்களுக்கு பட்டது. அதன் பின்னர் இவரை வெளியில் கூட காண முடிவதில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகர் கௌண்டமணி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். அவரது நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்று யூடுயூப் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. அந்த செய்தி மிகவும் வைரலாக பரவியது.

இதனால் பல்வேறு இனைய தளத்திலும் கௌண்டமணியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று செய்தி வெளியானது. இப்படி ஒரு நிலையில் அந்த தகவல் பொய்யானது என்று கௌண்டமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் தன்னுடைய வழக்கறிஞர் மூலம் கவுண்டமணி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஒருசில இணையதளங்கள் தன்னுடைய உடல் நிலை குறித்து அவதூறு பரப்புவதாகவும், தனது உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கோரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது

Advertisement
Advertisement