ரஜினி மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாத கௌண்டமணி.! இந்த பிரபலர் வீட்டின் திருமணத்திற்கு சென்றுள்ளார்.!

0
1237
manobala-daughter

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் இரண்டாவது திருமணம் நேற்று (பிப்ரவரி 10 ) சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் எடப்பாடி உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்களும் நடிகர்களும் கலந்து கொண்டனர்.

சௌந்திரயா கடந்த 2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அஷ்வினுக்கும், சௌந்தர்யாவிற்ங்கும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றது. பின்னர் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து பெற்றனர். 

- Advertisement -

கோவையை சேர்ந்த கோவை முன்னாள் எம் எல் ஏ பொன்முடியின் மகன் விசாகன் என்பவரை சௌந்தர்யா இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் பல நடிகர்கள் பங்குபெற்ற நிலையில் பிரபல நடிகர் கௌண்டமணி பங்குபெறவில்லை.

ஆனால், நேற்று நடைபெற்ற பிரபல காமெடி நடிகர் மனோபாலா மகனின் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார் கௌண்டமணி. கிண்டியில் உள்ள பிரபல லி மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், நடிகர்கள் சத்யராஜ், சிபிராஜ், ராதாரவி, கார்த்தி, விஷால், அருண் விஜய் ஆகியோர் பங்குபெற்றனர்.

-விளம்பரம்-
Advertisement