சொத்து அபகரிப்பு விவகாரத்தில் கவுண்டமணிக்கு நீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை கோயம்பேடு ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவருக்கு சொந்தமாக இருந்த நிலத்தை நடிகர் கவுண்டமணி அவர்கள் 1996 ஆம் ஆண்டு வாங்கி இருந்தார். பின் இவர் அந்த நிலத்தை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்திருக்கிறார்.

பின் இவர் 22700 சதுர அடி பரப்பிலான இந்த நிலத்தில் 15 மாதங்களில் வணிக வளாகத்தை கட்டி முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தமும் போட்டு இருக்கிறார். இதற்காக 3 கோடி 58 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் பேசப்பட்டது. அதன் படி 1996 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் தொகையை கவுண்டமணி செலுத்தி இருக்கிறார். இதனை தொடர்ந்து வளாக கட்டுமான பணிகள் எதுவும் 2003 ஆம் ஆண்டு வரை தொடங்கவே இல்லை.

Advertisement

கவுண்டமணி நிலம் விவகாரம்:

பின் இது தொடர்பாக கவுண்டமணி அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. அப்போது சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான கடிதத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்திரப்பட்டு இருக்கிறார்கள். அதற்குப்பின் விசாரணையில் 46 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு இருக்கிறது.

நீதிமன்றம் தீர்ப்பு:

ஆகவே, கவுண்டமணியிடம் 63 லட்சம் ரூபாய் அதிகமாகவே கட்டுமான நிறுவனம் வாங்கி இருப்பதாக அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் கவுண்டமணி இடமிருந்து வாங்கிய ஐந்து கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு லட்ச ரூபாய் மாதம் ஒன்றுக்கு கவுண்டமணிக்கு இழப்பீடாக கொடுக்க உத்தரவு போட்டிருந்தார்கள்.

Advertisement

நீதிமன்றம் உத்தரவு :

மேலும், இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் 2019 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த போது தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடியும் செய்திருக்கிறார்கள். கவுண்டமணி கொடுத்த ஐந்து ஏக்கர் இடத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்கும்படி அபிராமி பவுண்டேஷனுக்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் உரிமை இல்லாமல் சொத்தை ஆக்கிரமித்து வைத்திருந்ததால் கவுண்டமணிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

கவுண்டமணி குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் காமெடியில் ஜாம்பவனாகவும், சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்தவர் கவுண்டமணி. அன்றும் இன்றும் என்றும் இவருடைய காமெடிக்கு எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். காமெடி என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி பெயர் தான். அந்தளவிற்கு தன்னுடைய நகைச்சுவை திறமையின் மூலம் மக்களை தன்வசம் படுத்தியுள்ளார். இவர் ரஜினி, கமல் காலகட்டம் தொடங்கி தற்போது உள்ள நிறைய நடிகர்கள் வரை என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சிறிய இடைவெளிக்கு பின் தற்போது இவர் நடித்து வருகிறார்.

Advertisement