பிக் பாஸில் இருக்கேனா இல்லையா ? லைவில் சொன்ன ஜி பி முத்து – அப்டேட்க்கு இவரே போதும் போல.

0
3403
gpmuthu
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்று வரும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. விஜய் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. மேலும், இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி சமூக வலைதளத்தில் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது.

-விளம்பரம்-

அதுவும் சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து ரசிகர்களும், நெட்டிசன்களும் எக்கச்சக்க கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த வாரம் மட்டும் பிக்பாஸ் குறித்த பரபரப்பான செய்தி நம்ம யூடியூப் பிரபலம் ஜி பி முத்து தான். ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டிற்கு செல்வாரா? இல்லையா? என்று பல கேள்விகள் சோசியல் மீடியாவில் எழுந்தவண்ணம் உள்ளன. யூடியூப் மூலம் பிரபலமானவர் ஜி பி முத்து. இவர் தனக்கு வரும் கடிதங்களையும், தினம் நடக்கும் நிகழ்ச்சிகளையும் தனக்குரிய வட்டார மொழியில் பேசுவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையும் பாருங்க : மகனுக்கு Baptism துவங்கப்பட்டு விட்டது – மியா பகிர்ந்த குயூட் புகைப்படம். அப்படினா என்ன தெரியுமா ?

- Advertisement -

தற்போது இவர் பல படங்களில் நடிப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வாரா? என்று கேட்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் ஜி பி முத்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மாதிரி புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது. இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார். இந்த நிலையில் ஜி பி முத்து தான் பிக் பாஸ் வீட்டில் கலந்து கொள்கிறாரா? இல்லையா? என்று ஒரு தெளிவான விளக்கத்தை வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது, பிக் பாஸ் வீட்டுக்குள் நான் இருப்பது பற்றி நானே யோசிக்க வேண்டிய விஷயம். ஏன் என்றால் என்னால் மொபைல் இல்லாமல் இருக்க முடியாது.

வீடியோவில் 8 : 30 நிமிடத்தில் பார்க்கவும்

அது மட்டுமில்லாமல் என் குழந்தைகளை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. எத்தனை தடைகள் வந்தாலும் எனக்கு என்னுடைய மனைவியும், குழந்தைகளும் தான் முக்கியம். அவர்களை பார்க்காமல் என்னால் இருக்கவே முடியாது என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் இந்த மனுஷன் பாசக்கார மனுஷன் என்று பல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement