திருநங்கையாக நடிக்கும் Tik Tok பிரபலம் ஜி பி முத்து – வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

0
895
GPMuthu
- Advertisement -

திருநங்கையாக ஜி பி முத்து மாறியிருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஜி பி முத்து. டிக்டாக் நண்பர்களே என்ற வார்த்தையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் என்ற அறிமுகமானவர் ஜி பி முத்து. இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

-விளம்பரம்-

இவர் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று எல்லா சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார். அதிலும் யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருக்கிறது என்று சொல்லலாம். ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, மேக்கப் கிடையாது, வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது, இருப்பினும் இவரது யூடுயூப் சேனல் வேகமாக வளர்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து:

மேலும், யூடுயூபில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து தான் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. அதோடு ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் கண்ணும் ஜிபி முத்து மீது தான் இருந்தது. இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டது ஜி பி முத்து தான். அதோடு இவர் இறுதி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

ஜிபி முத்து நடித்த படம்:

இது பலருக்குமே ஷாக்கை கொடுத்திருக்கிறது. இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பிருந்ததை விட அதிகமாக ஜிபி முத்துவிற்கு ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது . நிகழ்ச்சியை விட்டு வந்த பிறகு ஜி பி முத்து சன்னி லியோனுடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்திருந்தார். இவர் சன்னி லியோனுடன் இணைந்து ‘Oh My Ghosh’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். காமெடி நடிகர் சதீஷ், குக் வித் கோமாளி தர்ஷா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முத்து:

அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு ஜிபி முத்துக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. அது தவிர ஏகப்பட்ட நிகழ்ச்சியிலும் ஜி.பி. முத்து கலந்து இருக்கிறார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியாக ஜிபி முத்து பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் பண்ணும் காமெடிக்கு அளவே இல்லை. வாரம் வாரம் இவரை பார்ப்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் கூட்டமும் இருந்தது. தற்போது ஜி பி முத்து படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

gpmuthu

திருநங்கையாக மாறியிருக்கும் புகைப்படம்:

இந்த நிலையில் ஜிபி திருநங்கையாக மாறியிருக்கும் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிக வைரல். அதாவது, ஜி பி முத்து அவர்கள் ஆர்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மணி ஆரவ் இயக்குகிறார். இந்த படத்தில் ஜிபி முத்து அவர்கள் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது தொடர்பான போஸ்டர் தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் ஜி பி முத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து படம் குறித்து அப்டேட்டை கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.

Advertisement