-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

நடுத்தெருவில் காதே கூசும் அளவுக்கு கெட்ட வார்த்தை பேசிய ஜிபி முத்து, காரணம் இது தான்-வைரலாகும் வீடியோ

0
231

நடுரோட்டிலேயே கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி ஜி.பி. முத்து பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. டிக்டாக் நண்பர்களே என்ற வார்த்தையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் ஜி பி முத்து. இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று எல்லா சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார்.

-விளம்பரம்-

அதிலும் யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருக்கிறது என்று சொல்லலாம். ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, மேக்கப் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது, இருப்பினும் இவரது யூடுயூப் சேனல் வேகமாக வளர்கிறது. மேலும், யூடுயூபில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து:

அதோடு ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் கண்ணும் ஜிபி முத்து மீது தான் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலந்து கொண்டு நன்றாக தான் விளையாடி இருந்தார். இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டது ஜி பி முத்து தான். அதோடு இவர் இறுதி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இது பலருக்குமே ஷாக்கை கொடுத்தது.

ஜிபி முத்து நடித்த படம்:

-விளம்பரம்-

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜிபி முத்துக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் ஏகப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்து இருக்கிறார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியாக ஜிபி முத்து பங்கேற்று இருந்தார். தற்போது இவர் சன் டிவியில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதை அடுத்து இவர் சினிமாவிலும் அதிக கவனம் செலுத்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடுரோட்டில் பூசாரியுடன் ஜி.பி முத்து சண்டை போட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ஜிபி முத்து-மகேஷ் சண்டை:

அதாவது, ஜி பி முத்து வசித்து வரும் கிராமத்தில் பிரம்மசக்தி அம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த கோவில் ஜி.பி முத்து குடும்பத்தினுடைய சொந்த கோவி.ல் இந்த கோவிலில் மகேஷ் என்பவர் பூஜை செய்து வருகிறார். இந்த கோவிலில் கோடை விழா தவிர தமிழ் மாதத்தின் முதல் நாட்களில் பூஜை நடக்கும். இதில் ஜிபி முத்து மற்றும் அவருடைய குடும்பத்தினர் கலந்து கொள்வது வழக்கம். அதேபோல் இந்த பூஜையில் மகேஷ் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுமே கலந்து கொள்வார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு புரட்டாசி மாதம் பிறந்தது.

கெட்ட வார்த்தையில் பேசிய முத்து:

இதனால் பிரம்மசக்தி அம்மன் கோவிலில் மகேஷ் மற்றும் அவருடைய உறவினர்கள் பூஜை செய்தார்கள். அப்போது கோயிலுக்கு வந்த ஜி.பி முத்து பூஜை செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதை மகேஷ் மற்றும் அவருடைய உறவினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஜி பி முத்து மற்றும் மகேஷ் தரப்பு இடையே வாக்குவாதம் அதிகமானது. நடு ரோட்டிலேயே ஜிபி முத்து- மகேஷ் இருவருமே பயங்கர சண்டை போட்டுக் கொண்டார்கள். இந்த சண்டையில் ஜிபி முத்து தரகுறைவான, மோசமான வார்த்தைகள் எல்லாம் பேசி இருந்தார் . இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news