மீசையே முலைக்கல லவ்வு ஒரு கேடா – மருமகேளே வீடியோவை கிழித்து தொங்கவிட்ட ஜிபி முத்து.

0
4706
gp
- Advertisement -

சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும் ஆண்கள் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விடீயோக்கள் மூலம் லட்சக்கணக்கில் லைக் பெறுவதும் உண்டு. இந்த அற்ப லைக்குக்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வந்தனர்.

-விளம்பரம்-

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் இந்த டிக் டாக் செயலி பிரபலமானது. இப்படி ஒரு நிலையில் இந்த ஆப் கடந்த ஆண்டு தடை செய்யப்பட்டது. இதனால் டிக் டாக்கில் இருந்த பலரும் இன்ஸ்டாகிராம் யூடுயூப் என்று தாவி அதில் வீடியோ போட துவங்கிவிட்டனர். டிக் டாக் மூலம் பல 2k கிட்ஸ் பசங்க கூட பிரபலமாகி இருக்கின்றனர். அந்த வகையில் பள்ளிக்கு செல்லும் வயதில் வயதுக்கு மீறி வீடியோ போட்டு பிரபலமானவர் குட்டி வடிவேலு.

இதையும் பாருங்க : “நாங்க என்ன பேங்க்கா நடத்துறோம், திருப்பியெல்லாம் கொடுக்க முடியாது” VJS, SK படங்களுக்குப் புது சிக்கல் கொடுத்துள்ள டிவி நிர்வாகம்.

- Advertisement -

இதற்கு முன்னாள் இவர் எப்படியோ தெரியவில்லை கடந்த சில நாட்களாக இவர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டடிங்கில் இருந்து வருகிறார். அதற்கு காரணம் இவர் போட்ட மருமகளே வீடியோ தான். சமீபத்தில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டது என்று இவரது காதலியுடன் வீடியோ ஒன்றை போட்டு இருந்தார். அதில் அந்த சிறுமியின் அம்மா அந்த சிறுமியை மருமகளே என்று கூப்பிடுவதும், பதிலுக்கு அந்த பையன் அத்தை என்று கூப்பிடுவதும் பல 90ஸ் கிட்ஸ்களை காண்டில் ஆக்கியது.

பல 90ஸ் கிட்ஸ்கள் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கையில் இன்னும் வயசுக்கு கூட வராத இவர்கள் இருவரும் பொழிந்த காதலை பார்த்து பலரும் கடுப்பாகினர். இவர்களின் இந்த வீடியோவை பலரும் ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து இவர்களின் வீடியோவை பார்த்து கடுப்பாகி தன் பங்கிற்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement