மணிமேகலையை தொடர்ந்து CWC நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த GP முத்து – அவரே சொன்ன காரணம்.

0
723
Gpmuthu
- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து ஜி பி முத்து விலக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஜிபி முத்து. இவர் டிக்டாக் நண்பர்களே என்ற வார்த்தையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று எல்லா சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார்.

-விளம்பரம்-

அதிலும் யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருக்கிறது என்று சொல்லலாம். மேலும், ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, எடிட் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது இருப்பினும் இவரது யூடுயூப் சேனல் வேகமாக வளரும். அதோடு யூடுயூபில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து:

அதோடு ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் கண்ணும் ஜிபி முத்து மீது தான் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலக்கி கொண்டு இருந்தார். இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டது ஜி பி முத்து தான். இதனால் இவர் இறுதி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இது பலருக்குமே ஷாக்கை கொடுத்திருக்கிறது.

Gpmuthu

ஜிபி முத்து நடித்த படம்:

பின் இவர் சன்னி லியோனுடன் இணைந்து ‘Oh My Ghosh’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு ஜிபி முத்துக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இவர் ஏகப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்து இருக்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியாக ஜிபி முத்து பங்கேற்று இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இவர் பண்ணும் காமெடிக்கு அளவே இல்லை.

-விளம்பரம்-

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முத்து:

வாரம் வாரம் இவரை பார்ப்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் கூட்டமும் இருக்கிறது. இந்த நிலையில் ஜிபி முத்து சமீபத்தில் திடீரென மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதற்குப் பிறகு ஜி பி முத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். இந்த நிலையில் ஜிபி முத்து வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் தான் ஜி பி முத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார்.

ஜிபி முத்து வீடியோ:

பின் இவர் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இந்த மாத இறுதியில் சூட்டிங் என்னை கூப்பிட்டால் நான் கலந்து கொள்வேன். ஏற்கனவே அதிகமாக ஓய்வில்லாமல் நான் ஓடிக்கொண்டே இருந்ததால் தான் என்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு விட்டது. அதனால் இனி அப்படி ஒரு தப்பை செய்ய மாட்டேன். குக் வித் கோமாளி நிகழ்ச்சி எனக்கு ரொம்பவே பிடிக்கும். அங்கு நாங்கள் எல்லோரும் ஜாலியாக பேசி விளையாடிக் கொண்டிருப்போம். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட மகிழ்ச்சியாக தான் இருப்போம். ஆனால், ரெஸ்ட் இல்லாமல் அடிக்கடி சுத்தி கொண்டிருப்பதால் என்னுடைய உடல் சோர்வாகிவிட்டது என்று கூறியிருக்கிறார். ஜிபி முத்துவின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் உடம்பை தேத்திக்கொண்டு ஓடி வாங்க தலைவரே உங்களுடைய ரீ என்ட்ரி பார்க்க வேண்டும் என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

Advertisement