தன் நண்பர் இறந்துவிட்டதாக ஜி பி கதறி அழுது வெளியிட்ட வீடியோ பார்பவர்களை கலங்க செய்துள்ளது. ”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கும் நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான். இவரது நெல்லைப் பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டதும் டிக் டாக் வாசிகள் பலரும் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று இடம் பெயர்ந்து விட்டனர். அந்த வகையில் ஜி பி மமுத்துவும் இன்ஸ்டாகிராமில் மற்றும் யூடுயூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவரது யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் தற்போது வைரல்.

இவரது யூடுயூப் சேனலில் தனக்கு அனுப்பும் லெட்டர்களை படித்து காண்பித்து வருகிறார். அதில் கண்ட கண்ட பொருட்களை எல்லாம் பலர் அனுப்புகின்றனர். அது ஒரு புறம் வேடிக்கையாக இருந்தாலும் இவரது தமிழில் இவர் அதை படித்து அதற்கு இவர் கொடுக்கும் பதில்கள் தான் மிகவும் வேடிக்கையாக இருந்தது வருகிறது. இவரது வீடியோகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவும் கிடைத்து வருகிறது.

இதையும் பாருங்க : ‘வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோ’ – மாதவனை கடிந்துள்ள அவரின் மனைவி. காரணம் அவர் பதிவிட்ட இந்த புகைப்படம் தானாம்.

Advertisement

எப்போதும் மக்கள் அனைவரும் சிரிக்கும்படி வீடியோவை பதிவிடும் ஜி பி முத்து சமீபத்தில் கண்ணீர் மல்க கதறி கதறி அழும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதற்கு காரணம் அவருடைய நெருங்கிய நண்பர் செந்தில்குமார் என்பவர் காலமாகி இருப்பதுதான். தன்னுடைய நண்பரின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்சில் இருந்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருக்கும் ஜி பி முத்து, தன்னுடைய நண்பரின் பிரிவால் வாடி அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் ‘நான் எல்லாரையும் சிரிக்க வைத்தேன் ஆனால் என்னை ஆண்டவன் வைத்து விட்டான் என் நண்பன் என்னை விட்டு சென்று விட்டான் கண்டிப்பாக ஆண்டவன் என்ன அழ வச்சிட்டான் என்று கதறி அழுது இருக்கிறார் ஜி பி முத்து. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது மேலும் ஜிபி முத்துவின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜி பி முத்து கார் ஒன்றை வாங்கியிருந்தான். அப்போதுகூட அந்த காரில் யாரையும் நீங்கள் முதலில் ஏற்றிக் கொண்டீர்கள் என்று கேட்கப்பட்ட போது நான் என்னுடைய நண்பரை தான் ஏற்றிச் சென்றேன் என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு நாம் அவர்கள் மீது மிகுந்த அன்பும் நன்றியும் கொண்டவர் ஜி பி முத்து.

Advertisement
Advertisement