தமிழ் சினிமா உலகில் என்னென்றும் சாக்லேட் பாயாக திகழ்பவர் நடிகர் மாதவன். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். ரொமான்டிக் படமான இது சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. சொல்லபோனால் நடிகர் மாதவனுக்கு இந்த படம் தான் சினிமா வாழ்க்கையில் ஒரு நல்ல துவக்கமாக இருந்தது.
தமிழ் சினிமாவில் நுழைந்த போது சாக்லட் பாய் என்ற முத்திரையுடன் வந்த மாதவன் தற்போது ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார்.அலைபாயுதே படத்தில் அறிமுகமாவதற்கு முன்பே அவருக்கு திருமணமும் ஆகி இருந்தது. இருப்பினும் அலைபாயுதே படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம்வந்த மாதவனுக்கு ஆண் ரசிகர்களைவிட பெண் ரசிகர்கள் தான் அதிகம் இருந்தனர்.
இதையும் பாருங்க : பிரபல ஷாப்பிங் விளம்பரத்தில் மாடலாக நடித்துள்ள சச்சின் மகள் – எப்படி வளந்துட்டார் பாருங்க. வைரல் வீடியோ.
மாதவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்தும் அவரை பல பெண்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். தற்போது மாதவனுக்கு தோலுக்கு மேல் வளர்ந்த ஒரு மகனும் இருக்கிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாதவன் அடிக்கடி தன்னுடைய புகைப்படக்களை பதிவிடுவது வழக்கம்.
அப்படி அவர் பதிவிடும் புகைப்படங்களை பார்த்து தற்போதும் பல இளம் பெண்கள் அவரை திருமணம் செய்துகொள்ள கேட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சட்டை இல்லாமல் ஒரு போட்டோவை வெளியிட்டு இருந்தார். அதற்கு இணையத்தில் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஆனால் வீட்டில் அவரது மனைவி அவரை கடிந்துகொண்டாராம். “வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோங்க” என திட்டினாராம். இதை மாதவனே தற்போது ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.