புகைப்படத்தில் இருக்கும் இந்த சூப்பர் ஸ்டார் நடிகைய தெரியுதா பாருங்க.

0
201011
Rajini-actress
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் மிகவும் பிரபலமானவர் இவர். மேலும்,இவர் எண்பதுகளிலேயே குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். அதற்குப் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றவர். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்ல அரசியல்வாதியும் ஆவார். மேலும், இவருடைய அழகிற்கு என ரசிகர்கள் கூட்டம் இன்று வரை குறையவே இல்லை என்று சொல்லலாம். அதுமட்டும் இல்லாமல் இவருக்கு உருவ சிலையை வைத்து கூட கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். மேலும், உணவுப் பொருள்களில் இவருடைய பெயரை வைத்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

அந்த உணவு தமிழ் நாட்டின் பாரம்பரியமான உணவு ஆகும். அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலமான நடிகை இவர். சினிமா துறையில் பல முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், சத்யராஜ்,பிரபு உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும்,இவர் சினிமா துறையில் பிரபலமாகி வரும் போது இவருக்கும் சினிமாவில் பிரபல நடிகர் ஒருவருக்கும் தொடர்பு உண்டு என பல கிசு கிசுக்கள் வந்து கொண்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் இவருடைய ‘அரைச்ச சந்தனம்’ பாடலைக் கேட்பதற்காகவே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக செல்வார்களாம். அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர். மேலும்,திரையுலகில் அந்த படம் 100 நாட்கள் தாண்டியும் ஓடியது என்ற தகவலும் அனைவருக்கும் தெரிந்ததே.

இதையும் பாருங்க : முதன் முறையாக தந்தையின் விவாகரத்து குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன்.

- Advertisement -

இதனைத்தொடர்ந்து இவர் சினிமா திரை உலகில் மிக பிரபலமான இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது உள்ள நடிகைகளில் ஒருவர் இவரைப் போலவே உள்ளார் என்ற தகவல் வெளிவந்து உள்ளது. மேலும், அந்த நடிகை விரல் நடிகரின் காதலி என்றும் பேசப்பட்டு வருகிறது. இப்படி இவர் இளமை ததும்பும் முகபாவம் உடையவராகவே விளங்கி வருகிறார். மேலும்,எண்பதுகளில் தொடங்கி இன்று வரை இவருடைய அழகிற்கு என ரசிகர்கள் படை கூடிக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்து துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும், சமீபத்தில் தான் இவருடைய சிறு வயது புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார், இது ரசிகர்களிடையே அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த புகைப்படம் தான். இந்நிலையில் இந்த நடிகை யார்? என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள். அப்படி நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் உங்களுடைய பதிலை கமெண்டில் சொல்லுங்கள்.

-விளம்பரம்-
Advertisement