டிஷ்யூம், காவலன், 7ஆம் அறிவு பட புகழ் கின்னஸ் பக்ருக்கு ஏற்பட்டுள்ள சோகம். புகைப்படம் இதோ.

0
1139
pakru
- Advertisement -

தமிழில் ஜீவா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ‘டிஷ்யூம்’ திரைப்படத்தில் அமிதாப் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் மலையாள நடிகர் பக்ரு. குள்ள நடிகர்களை தமிழ் சினிமா கொஞ்சம் மறந்திருந்த நிலையில் அவர்களை மீண்டும் நினைவுபடுத்தியவர் நடிகர் பக்ரு தான். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் மிமிக்ரி கலைஞ்சராக அறிமுகமானார்.

-விளம்பரம்-
நகைச்சுவை நடிகர் பக்ருவுக்கு கொரோனா தொற்று

அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் டிஷ்யூம், அற்புத தீவு, காவலன், 7 ஆம் அறிவு போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனரகாவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் பக்ரு. இவரது உண்மையான பெயர் அஜய் குமார். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க :உங்ககிட்ட மொதல்லே கேட்டேன் தமிழ் பேசுவீங்களானு’ – தன் படத்தின் விழாவில் இந்தியில் பேசிய தொகுப்பாளினி. மேடையில் இருந்து இறங்கி சென்ற ரஹ்மான்.

- Advertisement -

திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்து 2 வாரத்திலேயே இறந்துவிட்டது. அதன் பின்னர் இவருக்கு 2009 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அவரது பெயர் தீப்தா கீர்த்தி. தனது இரண்டாவது மகள் குறித்து ஒரு பேட்டியில் இருந்த பக்ரு, ஏழு வயசு வரை என்னை அண்ணன்னுதான் நினைச்சுகிட்டிருந்தா என்று கூறி இருந்தார் பக்ரு.

இப்படி ஒரு நிலையில் இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறார். இதனால் நடிகர் பக்ரு விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement